சைதையில் 20,000 போலி அடையாள அட்டைகள்: கருணாநிதி புதிய புகார்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் 20,000 போலி வாக்காளர் அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்றுதிமுக தலைவர் கருணாநிதி புகார் கூறினார்.
சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் 5,463 பெயர்கள் இரு முறை அச்சிடப்பட்டுள்ளன என்றுகருணாநிதி சமீபத்தில் தேர்தல் கமிஷனிடம் புகார் கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் பரிசோதித்த போது, 4,782 பெயர்கள் இரு முறை அச்சிடப்பட்டுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் கோளாறினால் தான் இந்தத் தவறு ஏற்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல்கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கியும் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்கள் இரு முறை அச்சிடப்பட்டதைத் தேர்தல்கமிஷனரே ஒப்புக் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
ஆனால் இதற்கு கம்ப்யூட்டர் கோளாறு தான் காரணம் என்று அவர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.கம்ப்யூட்டர்கோளாறு என்றால் வரிசை எண்களும் மாறியிருக்க வேண்டும் அல்லவா?
அதே போல் கடைசி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் தேர்தல் முடிவது வரை வாக்காளர் பட்டியலைத்திருத்த முடியாது என்று சாரங்கி கூறியிருப்பதையும் ஏற்க முடியாது. கடந்த வாரம் தானே சுமார் 1,400 போலிவாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன.
வாக்காளர் பட்டியல் குளறுபடி தவிர, போலி வாக்காளர் அடையாள அட்டைகளும் தற்போது சைதாப்பேட்டைதொகுதிகளில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
சுமார் 20,000 போலி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றை உபயோகித்துஅதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடத் தயாராகி வருகின்றனர்.
தேர்தல் கமிஷன் இதைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீது ஆதாரமில்லாமல் போலீசார் கொலை முயற்சி வழக்கைப் பதிவுசெய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
திமுகவினர் நேர்மையான வழிகளில் தான் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுகவினர் தான்வன்முறையிலும் அராஜகத்திலும் இறங்கியுள்ளனர். ஆனால் திமுகவினர் மீது மட்டுமே வழக்குகள் பதிவாகிக்கொண்டுள்ளன என்றார் கருணாநிதி.
"குடிநீர் சப்ளையில் அதிமுக ஊழல்":
முன்னதாக நேற்று சைதாப்பேட்டை தொகுதியில் பிரச்சாரம் செய்த கருணாநிதி, சென்னையில் லாரிகள் மூலம்குடிநீர் சப்ளை செய்ததில் முதல்வர் ஜெயலலிதா பெரும் ஊழல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
பிரச்சாரத்தின் போது அவர் மேலும் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் சென்னையில் 52 பாலங்கள் நான்கரை கோடி ரூபாய் செலவில்கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 கோடி செலவில் நேப்பியர் பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பார்த்து வெளி மாநிலங்களும் கூட தங்கள் மாநிலங்களில் இதே போல் பாலம் அமைக்க திட்டம் தீட்டிவருகின்றனர். இப்படி ஓராயிரம் நன்மைகளை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் செய்துள்ளோம்.
சென்னை மாநகரில், தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர்சப்ளை செய்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார். விரைவில் குடிநீர் சப்ளையில் அவர் செய்த ஊழலும் அம்பலமாகும்என்றார் கருணாநிதி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications