நீயா நானா? காங்கிரசில் வலுக்கும் கோஷ்டிப் பூசல்
சென்னை:
காங்கிரசில் காலம் காலமாக நிலவி வரும் கோஷ்டிப் பூசல் தற்போது அக்கட்சியுடன் தமாகாவை இணைக்கும்விவகாரம் தொடர்பாக மீண்டும் வெடித்துள்ளது.
தங்கபாலு ஒரு சுயலநவாதி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூற, அவருக்கு சவால் விட்டுகேள்வி எழுப்பியுள்ளார் தங்கபாலு.
காங்கிரசில் இருந்தாலும் தங்கபாலு எப்போதுமே தீவிர ஜெயலலிதா ஆதரவாளர். இளங்கோவனோ திமுக மீதுசாப்ட் கார்னர் கொண்டவர்.
இப்போது இவர்கள் இருவரிடையே கடும் சண்டை ஆரம்பித்துள்ளது.
தமாகாவை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க வேண்டாம் என்றும் இது தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்கவேண்டாம் என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் அதிருப்தியாளர் பிரிவுத்தலைவரான தங்கபாலு சமீபத்தில் கடிதம் எழுதியதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்தச் செய்திகளை தங்கபாலு வன்மையாக மறுத்துள்ளார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா.இணைவதைத் தடுக்கப் பார்க்கிறார் தங்கபாலு. சுயநலம் ஒன்றையே பிரதானமாகக் கருதும் தங்கபாலுபோன்றவர்களால் காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைவதைத் தடுக்க முடியாது.
தனது கல்வி நிறுவனங்கள் நன்றாக நடக்கிறதா என்ற கவலை மட்டுமே தங்கபாலுவுக்கு உண்டு. இது போன்றசுயநலமிகள்தான் காங்கிரசுடன் தமாகா இணைவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால் இவர்களது முயற்சிகள் பலிக்காது. இவ்விஷயத்தில் தங்கபாலு ஒரு காங்கிரசுக்கு துரோகியாகவேமாறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கும் இவரைப் போன்றவர்களால் கட்சியின் நற்பெயருக்குத் தான்களங்கம் ஏற்படும் என்பதை சோனியா காந்திக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். அவரும் இதைப் புரிந்துகொண்டுள்ளார் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
இளங்கோவன் மீது தங்கபாலு பாய்ச்சல்:
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தங்கபாலு இன்று இளங்கோவனைத் தாக்கிப் பேசியுள்ளார். அவர் இன்றுநிருபர்களிடம் கூறியதாவது:
எம்.எல்.ஏ. யசோதா, ஜெயக்குமார், வாழப்பாடி ஆகியோருடன் சமீபத்தில் டெல்லி சென்ற நான் சோனியாவைச்சந்தித்தேன்.
இவ்வாறு சந்திக்கும் போது நாங்கள் சோனியாவிடம் மனுக்களைக் கொடுப்பது வழக்கம் தான். ஆனால் த.மா.கா.இணைப்பை எதிர்த்து நான் எந்தக் கடிதத்தையும் நான் சோனியாவிடம் கொடுக்கவில்லை.
இளங்கோவனின் தீவிர ஆதரவாளரான ஜெயக்குமார் தான் சோனியாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதுவும்ரகசியமாகத் தான் அவர் அந்த கடிதத்தைக் கொடுத்தார்.
அந்தக் கடிதம் என்னவென்று கூற இளங்கோவன் தயாரா? அதை வெளியிடுவதற்கும் அவர் தயாராக உள்ளாரா?என்று சவால் விடுக்கிறேன்.
த.மா.காவை இணைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் எப்போதும்கட்டுப்படுவேனே தவிர அந்த முயற்சியை உடைக்கும் விதத்தில் செயல்பட மாட்டேன் என்றார் தங்கபாலு.
காங்கிரசில் த.மா.கா. இணைவதற்கு முன்பே இவ்வளவு குழப்பம். அந்தக் கட்சியும் இணைந்து பதவிக்கு இருகட்சியினரும் மோத ஆரம்பித்தால் அதோ கதி தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications