பொன்முடி மீது கொலை முயற்சி வழக்கு
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தல் வரும் 31ம் தேதி நடக்கவுள்ள நிலையில் முன்னாள் திமுக அமைச்சரானபொன்முடி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி 138வது வார்டு கவுன்சிலரான கந்தன் என்பவர் கூறியபுகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் பொன்முடி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இந்த 14 பேரும் தன்னைக் கொலை செய்யப் போவதாக மிரட்டினர் என்று போலீசாரிடம் கந்தன் புகார்கூறியிருந்தார்.
இதையடுத்து கொலை முயற்சி, ஆயுதங்களைக் கொண்டு சிறிய காயம் ஏற்படுத்துதல், சொத்துக்களைநாசமாக்குதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் 14 பேர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது திமுக வேட்பாளரான மா. சுப்பிரமணியனுடைய தலைமைஏஜென்டாகப் பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். தான் இந்தப் பணியைச் செய்ய விடாமல் தடுப்பதற்காகவே தன்மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று பொன்முடி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் நிருபர்களிடம் கூறுகையில்,
எம்.எல்.ஏவாக இருந்து கொண்டே திமுக வேட்பாளரின் தலைமை ஏஜென்டாக இருக்கலாமா என்று முதலில்அதிமுகவினர் தகராறு செய்தனர்.
ஆனால் தேர்தல் விதிமுறைகளில் அப்படிப்பட்ட விதிகள் எதுவும் இல்லாததால் நான் திமுக ஏஜென்டாகத்தொடர்வதை அதிமுகவினரால் தடுக்க முடியவில்லை.
அவர்களுக்கு வேறு வழியும் தோன்றவில்லை. அதனால் இந்தக் குறுக்கு வழியை அதிமுகவினர் நாடியுள்ளனர்.என் மீது பொய்யான வழக்கைப் போட்டுள்ளனர்.
இது போன்ற பொய்யான வழக்குகளால் நாங்கள் துவண்டு போய் விட மாட்டோம். சட்டப்படி அவற்றை நாங்கள்எதிர் கொள்வோம். போலீசார் எந்த அளவுக்கு நடுநிலை வகிக்கிறார்கள் என்பதை அவர்கள் போட்டுள்ள இந்தவழக்கிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் என்றார் பொன்முடி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications