தீவிரவாதிகள் விடுதலை வீரர்கள் அல்ல: பிரிட்டன்
டெல்லி:
காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற போர்வையில் அங்கு பயங்கரவாதிகள் தான் ரத்தக் களரியைஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா கூறினார்.
காஷ்மீர் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் என்று பாகிஸ்தான் கூறி வருவதற்கு இதன மூலம் பிரிட்டன் தனதுஎதிர்ப்பைத் தெரிவித்துவிட்டது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்தியத் தலைவர்களிடம் பேச்சுநடத்துவதற்காக ஸ்டிரா நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் வந்தார். தீவிரவாதிகளை ஒடுக்குமாறு அந் நாட்டுராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரபை வலியுறுத்திய அவர் நேற்றப மாலை டெல்லி வந்தார்.
இன்று காலை உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்திய ஸ்டிரா பின்னர்நிருபர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாதத்தின் அத்தனை வடிவங்களையும் இங்கிலாந்து கடுமையாக எதிர்க்கிறது. இந்தியாவுக்குள் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
குறிப்பாக, காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற போர்வையில் அங்கு பயங்கரவாதிகள் தான் புகுந்துரத்தக் களரியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றார் ஸ்டிரா.
பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் ஆகியோரையும் ஸ்டிரா சந்தித்துப் பேசவுள்ளார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கவுள்ள ஸ்டிரா, பத்திரிக்கை நிருபர்களையும்சந்தித்துப் பேட்டி கொடுக்கவுள்ளார்.
முன்னதாக நேற்று பாகிஸ்தானுக்குச் சென்ற ஸ்டிரா, அந்நாட்டு ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் மற்றும்வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ அனுமதிக்க மாட்டோம் என்று ஜனவரி 12ம் தேதிஅளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும்படி முஷாரப்பிடம் ஸ்டிரா வலியுறுத்தினார்.
காஷ்மீரில் அப்பாவிகளை கொன்று குவித்து வரும் பயங்கரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றுபாகிஸ்தான் கூறியிருப்பதையும் ஸ்டிரா கண்டித்தார்.
இதற்கிடையே ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சரான செய்க்கன் சுகியுராவும் இன்று பாகிஸ்தான்சென்றுள்ளார்.
எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பாகிஸ்தான் தலைவர்களைச் சந்திக்கவுள்ள சுகியுரா, நாளைஇந்தியாவுக்கும் வரவுள்ளார்.
தீவிரவாதிகளைத் தடுக்காவிட்டால் நிதியுதவியை ரத்து செய்வோம் என ஜப்பான் ஏற்கனவே பாகிஸ்தானிடம்கூறியுள்ளது.
முஷாரப் பேச்சுக்கு அமெரிக்கா வரவேற்பு:
இதற்கிடையே முஷாரப் பேச்சை அமெரிக்கா மறைமுகமாக வரவேற்றுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று முஷாரப் கூறியதை அமெரிக்காபாராட்டியுள்ளது.
ஆனால் ஏவுகணைகள் சோதனை என்ற பெயரில் எல்லையில் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதற்காக பாகிஸ்தானை எச்சரிக்கையும் செய்துள்ளது அமெரிக்கா.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications