3 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்புக்கு 7,500 கூடுதல் போலீசார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இடைத் தேர்தல் நடகும் மூன்று தமிழக சட்டசபைத் தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்குகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நாளை இடைத் தேர்தல்நடைபெறவுள்ளது. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த இடைத்தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்தன.

மூன்று தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர் பட்டியல், மின்வாக்குப்பதிவு எந்திரம், மை உள்பட தேர்தலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தயாராகவைக்கப்பட்டுள்ளன.

மூன்று தொகுதிகளின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் இன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருந்தஅறைகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

பாதுகாப்புப் பணியில் 7,500 கூடுதல் போலீசார்:

இதற்கிடையே சைதாப்பேட்டை தொகுதியில் இடைத் தேர்தலை முன்னிட்டு 10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் 9 கம்பெனி விசேஷ தமிழகப் போலீசாரும் இங்குகுவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் போலீசார் தவிர 3,000 கூடுதல் போலீசார் சைதாப்பேட்டை தொகுதியில் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுவார்கள்.

தற்போது போலீசார் அனைவரும் தனித் தனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சைதாப்பேட்டை தொகுதியின்பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டனர்.

இதே போல் வாணியம்பாடியில் 2,500 கூடுதல் போலீசாரும் அச்சிறுப்பாக்கத்தில் 2,000 கூடுதல் போலீசாரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே மூன்று தொகுதிகளிலுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் நேற்று மாலை கொடிஅணிவகுப்பு நடத்தினர்.

வாணியம்பாடியில் 100, சைதையில் 75, அச்சிறுப்பாக்கத்தில் 100:இதற்கிடையே வாணியம்பாடியில் 100 வாக்குச் சாவடிகளும், சைதாப்பேட்டையில் 75 வாக்குச் சாவடிகளும் மற்றும்அச்சிறுப்பாக்கத்தில் 100 வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவை என்று தெரிய வந்துள்ளது.

இது போன்ற பதற்றமான பகுதிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு உள்பட மூன்று ஆயுதமேந்திய போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறினார்.

யார் யார் போட்டி?

சைதாப்பேட்டை தொகுதியில் ராதாரவி (அதிமுக), மா. சுப்பிரமணியன் (திமுக), ப. சுப்பிரமணி (மதிமுக) மற்றும் டி.நந்தகோபால் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

273 வாக்குச் சாவடிகள் கொண்ட இத்தொகுதியில் 2,47,974 வாக்காளர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்.இவர்களில் 1,24,241 பேர் ஆண்கள் மற்றும் 1,23,733 பேர் பெண்கள்.

அதேபோல் வாணியம்பாடி தொகுதியில் ஆர். வடிவேல் (அதிமுக), நாகூர் ஈ.எம். ஹனீபா (திமுக), இரா.லட்சுமிகாந்தன் (மதிமுக) மற்றும் நவாஸ் (இந்திய தேசிய லீக்) உள்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் 244 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,67,240 வாக்காளர்கள் கொண்டஇத்தொகுதியில் 80,982 ஆண்களும் 86,258 பெண்களும் வாக்களிக்கவுள்ளனர்.

பூவராகமூர்த்தி (அதிமுக), டி. பார்வேந்தன் (பாமக) மற்றும் எல்லப்பன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட 16வேட்பாளர்கள் அச்சிறுப்பாக்கம் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தொகுதியில் மொத்தம் 123 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 99,052 ஆண்களும், 1,03,831பெண்களுமாக மொத்தம் 2,02,883 பேர் நாளை அச்சிறுப்பாக்கம் தொகுதியில் வாக்களிக்கவுள்ளனர்.

ஜூன் 2ல் முடிவுகள்:

நாளை மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் வரும் ஜூன் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது.

அன்று காலை 11 மணியளவில் முதல் சுற்று முடிவுகள் தெரிய ஆரம்பிக்கும். பகல் 12 மணிக்கெல்லாம் வாக்குகள்முழுவதுமாக எண்ணப்பட்டு யார் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+