ரயில்கள், ரயில்வே அலுவலகங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்
சென்னை:
சென்னையில் உள்ள தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகம்,பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைஉள்ளிட்ட சில ரயில்வேத்துறைக்குச் சொந்தமான இடங்களில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த இடங்களில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் தவிர பிற மாநிலங்களில் உள்ள ரயில்வேயின் முக்கிய இடங்களையும் தாக்க தீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறைஅமைச்சகம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்படி விரைவில் இந்திய ரயில்வே மீது பயங்கர தாக்குதல் நடத்தப்படும்என்று தெரியவந்துள்ளது.
முக்கியமாக டெல்லியிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தூர ரயில்களான ராஜதானி எக்ஸ்பிரஸ்போன்ற ரயில்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இந்தியாவில் ஓடும் அனைத்துரயில்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, சென்னை நகரில் அமைந்துள்ளதென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகம் மற்றும் பேசின்பிரிட்ஜ் ரயில் தொழிற்சாலை ஆகிய இடங்களில்பெரும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே சென்னைத் துறைமுகத்திற்குத் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அபாயம் ஏற்பட்டுள்ளதாகவந்துள்ள தகவலையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பல்களிலும் சென்னையை விட்டுக் கிளம்பும் கப்பல்களிலும்கூட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் "ஹோவர்கிராப்ட்"படகுகளும் தீவிரப் பாதுகாப்புப் பணியிலும் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் ரயில்வேக்குச் சொந்தமான இடங்களைத் தாக்குவதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவந்துள்ள செய்தியால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான ஆட்ள் நடமாட்டம் இருந்தாலோ அல்லது யாருக்கும் சொந்தமில்லாதபெட்டிகள், சந்தேகத்திற்கிடமான பொருள்கள் கிடந்தாலோ உடனே அருகில் உள்ள ரயில்வே ஊழியர் அல்லதுபோலீசாரிடம் தகவல் தெரிவிக்குமாறு அனைத்துப் பயணிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications