கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி
பிரிட்ஜ்டவுன்:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுனில் நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
டெஸ்ட் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து ஒருநாள்தொடரையாவது வென்று ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்றுமூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்லே மற்றும்ஹிண்ட்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.
தொடர்ந்து வந்த அந்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான பிரையன் லாராவும் 5 ரன்களே எடுத்த நிலையில்பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து கார்ல் கூப்பரும் சர்வானும் மட்டுமே நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். ஆனால்சர்வான் அவுட் ஆன பிறகு வேறு யாருமே நிலைத்து நிற்கவில்லை.
கடைசியில் 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர் வெறும்186 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர்.
அதன் பிறகு ஆட வந்த இந்திய அணியினர் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டம் நடத்தினர். கேப்டன் சவுரவ்கங்குலியும் வீரேந்திர சேவக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.
ஆனால் 21 ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் ஆட்டமிழந்தார். இதையடுத்து தினேஷ் மோங்கியாவும் கங்குலியும்சேர்ந்து கொண்டு இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினர்.
இந்திய அணியின் ஸ்கோர் 109ஆக இருந்த போது 41 ரன்கள் எடுத்திருந்த கங்குலி அவுட் ஆகி பெவிலியன்திரும்பவே, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்குள் நுழைந்தார்.
அவரும் மோங்கியாவும் ஆடிய அதிரடி ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர் வீசிய பந்துகளை எல்லைக்கோட்டைத் தாண்டி விரட்டிக் கொண்டிருந்தது.
அப்போது 74 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென்று மோங்கியா அவுட் ஆனார். இதையடுத்து ராகுல் திராவிட்களத்தில் இறங்கி டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார்.
இறுதியில் டெண்டுல்கர் 34 ரன்களும் திராவிட் 9 ரன்களும் எடுத்திருந்த நிலையில் 43.5 ஓவர்களிலேயே இந்தியா187 ரன்களை எளிதாக நெருங்கி வெற்றி பெற்றது.
தினேஷ் மோங்கியாவுக்கு "மேன் ஆப் த மேட்ச்" விருது கிடைத்தது. அடுத்த ஒருநாள் போட்டி வரும் ஜூன் 1ம்தேதி (சனிக்கிழமை) டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications