குஜராத்தில் மீண்டும் வன்முறை: 2 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத்தில் நேற்று இரவு மீண்டும் வெடித்த திடீர் வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர்.
இம்முறை மேஹ்சனா மாவட்டத்தில் உள்ள காடி என்ற நகரில் வன்முறை ஏற்பட்டது.
காடி நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு முட்டை விற்பனைக் கடையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர்கொல்லப்பட்டார். அந்தக் கடையின் சொந்தக்காரர் படுகாயமடைந்தார்.
முகமூடி அணிந்திருந்த இரண்டு பேர் இந்தக் கடைக்கு வந்து திடீரென்று வெடிகுண்டுகளை எறிந்து விட்டு தப்பிவிட்டனர்.
இதையடுத்து காடி நகரில் வன்முறை வெடித்தது. நகரின் பல பகுதிகளிலும் வன்முறைக் கும்பல்கள் பஸ்கள் மீதுகற்களை எறிந்து, கடைகளுக்குத் தீ வைக்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையே இந்நகருக்கு அருகே உள்ள குண்டால் என்ற கிராமத்தில் ஒரு பஸ்சை வழிமறித்த வன்முறைக்கும்பல், அந்த பஸ்சின் கண்டக்டரை வெளியே இழுத்துப் போட்டு அவரை எரித்தே கொன்று விட்டது.
கொல்லப்பட்ட அந்த கண்டக்டர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றதைத் தொடர்ந்து காடி நகரில் ஊரடங்குஉத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நேற்று அகமதாபாத் நகரில் இரண்டு பஸ்களிலும் மற்றொரு இடத்திலும் குண்டுகள் வெடித்ததில் 12 பேர்காயமடைந்தனர். மேலும் இரண்டு பஸ்களில் வெடிகுண்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்து போலீசார் அவற்றைச்செயலிழக்கச் செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications