காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி
ஜம்மூ:
தோடாவில் உள்ள போலீஸ் நிலையத்தை நேற்றிரவு தீவிரவாதிகள் திடீரென்று தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்டகடும் துப்பாக்கிச் சண்டையில் 3 போலீசாரும 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மூன்றடுக்குக் கட்டடத்தில் அமைந்துள்ள இந்த போலீஸ் நிலையத்திற்குள் போலீஸ் சீருடை அணிந்த தீவிரவாதிகள்நேற்று இரவு திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அந்தத் தீவிரவாதிகள் சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். போலீசாரும் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று போலீசார் குண்டு பாய்ந்துஉயிரிழந்தனர். தீவிரவாதிகள் தரப்பிலும் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும்தோடா போலீஸ் நிலையத்திற்கு விரைந்து அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தஆரம்பித்தனர்.
துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே முதல் இரண்டு மாடிளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தராணுவத்தினர், மூன்றாவது மாடியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளையும் தாக்கி அங்குள்ள போலீசாரை மீட்கும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications