குஜராத் குண்டு வெடிப்பு: தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு
கோயம்புத்தூர்:
நேற்று குஜராத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பையடுத்து தமிழகத்தில், குறிப்பாக கோயம்புத்தூரில் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரண்டு பஸ்களிலும் மற்றொரு இடத்திலும் தொடர்ந்து மூன்று குண்டுகள்வெடித்ததில் 12 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இரண்டு பஸ்களிலிருந்து வெடிக்காத நிலையில் குண்டுகள்மீட்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.
அகமதாபாத்தில் நடந்த இந்தத் தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக 50க்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பதால் அகமதாபாத் குண்டு வெடிப்பு கோயம்புத்தூர் போலீசாரைஉஷார்படுத்தியுள்ளது.
இன்று கோயம்புத்தூர் நகருக்குள்ளும் நகரைச் சுற்றிலும் செல்லும் வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டன.
நகரிலுள்ள 21 இடங்களில் பாதுகாப்புக் குழுக்கள் இயங்கி வருகின்றன. நகருக்குள் வரும் வாகனங்கள் குறிப்பாககேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் இந்தக் குழுக்களால் கடும் சோதனைக்குப் பின்னரேஅனுமதிக்கப்படுகின்றன.
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் பயன்படுத்த டைம்-பாம் ரகக் குண்டுகள் தென் மாநிலங்களில் இருந்துதான் தயாரானதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இங்கு அது போன்ற வெடிகுண்டுகள்எதுவும் தயாரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக காஞ்சி காமகோடி பீடசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கோயம்புத்தூருக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு மேலும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறுநகரங்களிலும் தீவிரப் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதிலும் உள்ள விமான, ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை அருகே திருமங்கலத்தில் போலீசாரிடமிருந்து கடந்த மார்ச் 7ம் தேதி அல்-உம்மா தீவிரவாதியான இமாம்அலி தப்பி விட்டதையடுத்து, ஏற்கனவே மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications