இந்தியத் தாக்குதலில் பாக். ராணுவ அலுவலகம் தரைமட்டம்
இஸ்லாமாபாத்:
எல்லைப் பகுதியில் இந்தியா நடத்திய பயங்கரத் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அலுவலகங்களில் ஒன்றுதரைமட்டமானது. அருகிலிருந்த ஆயுதக் கிடங்கிலும் தீ பிடித்தது.
இத் தாக்குதலில் 12 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதிக்கு அருகே உள்ளது பாகிஸ்தான் ராணுவத்தின் 15வது நார்த்தர்ன்லைட் இன்பான்டரி பிரிவின் தலைமை அலுவலகம்.
நேற்று மாலை இந்த தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் இந்திய எல்லைநோக்கி பலத்த துப்பாக்கிச் சூடு நடந்தது. தொடர்ந்து மார்ட்டர் ரக கனரக துப்பாக்கிகளால் பாகிஸ்தான் படைகள்சுட்டன.
பீரங்கிகளையும் பயன்படுத்தி அவர்கள் தாக்கினர்.
இதையடுத்து இந்தியப் படைகள் நள்ளிரவில் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டன. இந்தியாவின் போபர்ஸ் பீரங்கிகள்மூலம் பதிலடித் தாக்குதல் தரப்பட்டது. இதில் பாகிஸ்தான் தரப்பில் மிக பலத்த சேதம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தின் 15வது இன்பான்டரி பட்டாலியனின் தலைமை அலுவலகத்தையும் இந்தியப் படைகள்குறி வைத்துத் தாக்கின. இதில் இந்தத் தலைமை அலுவலக்ததின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தொடர்ந்து இந்தியா நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் அந்த அலுவலகத்தில் தீ பிடித்துக் கொண்டது. இந்தத் தீஅருகில் இருந்த ஆயுதக் கிடங்குக்கும் பரவியது. இதில் அங்கிருந்த 12 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-லே இடையிலான தேசிய நெடுஞ்சாலையைத் துண்டிக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான்படைகள் தொடர்ந்து கனரக துப்பாக்கிகளால் சுட்டு வருகின்ரன. இதில் இந்திய கிராமங்களைச் சேர்ந்த 5 பேர்இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். இங்கும் பதிலடித் தாக்குதலில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
புதிய அமெரிக்கத் தூதர்:
இந் நிலையில் பாகிஸ்தானுக்கு புதிய தூதரை அமெரிக்கா நியமித்துள்ளது. இதுவரை அங்கு தூதராக இருந்து வந்தவெண்டி சாம்பர்லின் தனது குழந்தைகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை என்று கூறி வெளியேறிவிட்டார்.
இதையடுத்து நான்சி ஜோ போவல் என்பவரை பாகிஸ்தானுக்கு தூதராக நியமித்துள்ளார் புஷ். நான்சி போவலுக்குஉருது தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அமைச்சர் விரைகிறார்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைக் குறைக்க அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட்ரம்ஸ்பீல்ட் இரு நாடுகளுக்கும் பயணம் செய்வார் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications