நான் புலிகளின் ஆதரவாளன் தான்: வைகோ பகிரங்க பேச்சு
சென்னை:
நான் என்றுமே விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் தான் என்றும் அவர்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும்உண்டு என்றும் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கூறினார்.
சைதாப்பேட்டையில் தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது:
திமுகவும் அதிமுகவும் செய்யத் தவறிய நல்ல செயல்களை மதிமுக செய்து வருகிறது. புலிகளுக்கு எதிரானசட்டத்தை அதிமுக நிறைவேற்றிய போது திமுக அதை எதிர்க்கத் துணிவில்லாமல் நடுநிலை வகித்தது.
ஆனால் நான் எப்பொழுதுமே புலிகளின் ஆதரவாளன் தான். அவர்களை ஆதரிப்பதில் தவறேதும் இல்லை.இலங்கை மண்ணில் நம் சகோதரர்கள் தினம் தினம் செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள். காளி கோவிலும்சிவன் கோவிலும் இடிக்கப்பட்டு வருகின்றன.
எங்கள் மக்கள் இவ்வாறு அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்காக இங்கிருந்து நாம் குரல்கொடுப்பதில் தவறொன்றும் இல்லை.
இந்திய எல்லையில் பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளும் அபாயம் உள்ளது. பாகிஸ்தான் அணுகுண்டுசோதனை வேறு நிகழ்த்தியுள்ளது.
நான் சொல்லிக் கொள்வதெல்லாம், இனியும் பொறுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை.இந்தியாவைக் காக்க பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதில் தவறேதும் இல்லை. இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல்நடத்த வேணடும்.
சேது சமுத்திரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும், இந்தியப்பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம்கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார்மயமாக்கக்கூடாது என்றும் வேணடுகோள் விடுத்துள்ளோம்.இரண்டிற்கும் வாஜ்பாய் ஒப்புதல் அளித்துள்ளார் என்று வைகோ பேசினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications