இடைத் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத்தொடங்கியது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலுமே இன்று காலை 7மணியிலிருந்தே பொது மக்கள் வாக்குச் சாவடிகளின் முன் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.
தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் நேற்றே செய்து முடித்து விட்டதால்எந்தவிதமான ஆரம்ப நேர குழப்பமும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாகத் தொடங்கியது.
இன்று காலை சரியாக 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்துவருகிறது.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கும் இடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. அதே போல் அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதியில் அதிமுகவுக்கும் திமுகவின் கூட்டணிக்கட்சியான பாமகவுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் காரணமாக இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 225 வாக்குச்சாவடிகள் பதற்றம்நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இதையடுத்து அந்த வாக்குச் சாவடிகளில் எல்லாம் அதிகமான அளவில் ஆயுதமேந்திய போலீசார்பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ள ஓட்டுப் போடும் கும்பல்களைப் பிடிப்பதற்காகவே சிறப்புப் போலீசாரும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும்போடப்பட்டுள்ளனர். கள்ள ஓட்டுப் போட்டால் அவர்களுக்குக் குறைந்த பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனையாவதுகிடைக்கும் என்று ஏற்கனவே தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனரான மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
மூன்று தொகுதிகளிலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக தமிழகப் போலீசார் தவிரகூடுதலாக 7,500 சிறப்புப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும்10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சைதாப்பேட்டை எம்.எல்.ஏவாக இருந்த வை. பெருமாள் (திமுக), வாணியம்பாடி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல்லத்தீப் (இந்திய தேசிய லீக்) மற்றும் அச்சிறுப்பாக்கம் எம்.எல்.ஏவாக இருந்த ஏ. செல்வராஜ் (பாமக) ஆகியோர்இறந்ததைத் தொடர்ந்து இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 6,18,097 பேர் வாக்களிக்கவுள்ள இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 62 பேர் தேர்தல் களத்தில்உள்ளனர்.
இந்த மூன்று தொகுதிகளிலும் இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 2ல் முடிவுகள்:
இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் வரும் ஜூன் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது.
அன்று காலை 11 மணியளவில் முதல் சுற்று முடிவுகள் தெரிய ஆரம்பிக்கும். பகல் 12 மணிக்கெல்லாம் வாக்குகள்முழுவதுமாக எண்ணப்பட்டு யார் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்து விடும்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications