திருமணமான 5வது நாளில் போர் முனைக்குப் புறப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ராணுவ வீரர்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்தேவன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனக்குத்திருமணமான 5வது நாளே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள காஷ்மீர் எல்லைக்குப் புறப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பெருமாள்தேவன்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார்500 குடும்பங்கள் உள்ளன. இங்கு எப்போதுமே வீட்டுக்கு குறைந்தது ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பார்.
அந்த வகையில் 400க்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்டு விளங்குகிறது பெருமாள்தேவன்பட்டி.இதனால் இந்தக் கிராமம் "ராணுவ கிராமம்" என்றே அழைக்கப்படுகிறது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற ராணுவ வீரருக்குக் கடந்த 24ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் எல்லையில் தற்போது பெரும் பதற்றம் நிலவுவதையடுத்து எப்போது வேண்டுமானாலும்இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் முத்துக்கிருஷ்ணன் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அவருக்கு அவசரத் தந்தி வந்தது.இதையடுத்து முத்துக்கிருஷ்ணனும் உடனடியாக எல்லைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
திருமணமான ஐந்தாவது நாளன்றே போர் முனைக்குக் கிளம்புவது குறித்துக் கவலைப்படவில்லை என்று கூறியமுத்துக்கிருஷ்ணன், நாட்டிற்காகப் போரிடச் செல்வதை எண்ணி மிகவும் பெருமைப்படுவதாகவும் தன்னுடையமனைவியும் தன்னை முழு மனதோடு வாழ்த்தி அனுப்புவதாகவும் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications