மதுரை அருகே மீண்டும் தடம் புரண்ட ரயில்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஒரு மீட்பு ரயில் தடம் புரண்டதையடுத்து, சென்னை-மதுரைரயில்கள் தாமதமாக இங்கு வந்து சேர்ந்தன.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு "ரெக்கவர் டிரெய்ன்" என்று அழைக்கப்படும் ஒரு மீட்பு ரயில் கூடல் நகரிலிருந்துமதுரை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.

கிளம்பிய சிறிது நேரத்திலேயே அந்த ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயிலில் யாரும் இல்லாததால்உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.

இதையடுத்து சென்னையிலிருந்து மதுரை வழியாகத் தென் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய ரயில்கள் திண்டுக்கல்,கொடை ரோடு போன்ற நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

பின்னர் இன்று காலை சுமார் 6 மணிக்கு மேல் தான் அந்த ரயில் பாதை சீரானது. அதன் பிறகே சென்னை ரயில்கள்மதுரை வந்து சேர்ந்தன.

ஆனால் மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.45 மணிக்குக் குறித்த நேரத்தில்கிளம்பிச் சென்றது.

சமீப காலமாக ரயில் தடம் புரளும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த மே மாதத்தில் மட்டும்இதுவரை மூன்று ரயில்கள் தடம் புரண்டுள்ளன. இவற்றைத் தவிர ஈரோடு அருகே இரு ரயில்கள் நேருக்கு நேர்மோதிக் கொள்வது தவிர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+