தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்புகிறது: அமெரிக்கா
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து வருவது உண்மை தான். இதற்கான ஆதாரமும்உள்ளது என அமெரிக்கா முதன்முறையாக ஒளிவுமறைவின்றி பேசியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறுகையில்,
அவர்களைத் தடுப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருந்தாலும் தீவிரவாதிகள் தொடர்ந்துஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர். அவர்களைத் தடுப்பதாக முஷாரப் மீண்டும் உறுதிமொழி தந்துள்ளார். இம்முறை நிச்சயம் தனது உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.
இது மிக அவசரமான விஷயம். உடனடியாக அவர் தீவிரவாதிகளைத் தடுக்க வேண்டும். அதை முஷாரப் நிச்சயம்செய்வார் என்று நம்புகிறேன் என்றார்.
அமெரிக்கர் பாதுகாப்பு:
இந் நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை திரும்பி அழைக்க அந் நாடு முடிவு செய்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் நிலவுவதால் இந்தியாவில் இருக்கும் சுமார் 60,000அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு அறிவுறுத்த அந் நாட்டு வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
ஆனாலும் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இன்னும் இறுதிமுடிவெடுக்கவில்லை.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பள்ளிக்கு அடுத்த வாரம் முதல் இரு மாத கோடை விடுமுறை விடப்படஉள்ளது. இதனால் பல தூதரக ஊழியர்கள் குடும்பத்துடன் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளனர்.இவர்களை நிலைமையை ஆராந்த பின்னர் தான் அந் நாட்டு திரும்ப இந்தியாவுக்கு அனுப்பும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானை நிச்சயம் தாக்கப் போகிறோம் என தங்களிடம் இந்தியா தெரிவித்துவிட்டதாக பெயர் சொல்லவிரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனது மக்களை இந்தியாவை விட்டு வெளியேற்றிவிட அமெரிக்க தீவிரமாக யோசித்து வருகிறது.
இந் நிலையில் தான் நேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாகிஸ்தான் மீது கோபமாக சில கருத்துக்களைவெளியிட்டார். தீவிரவாதிகளை ஒடுக்குவதாகப் பேசும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் முதலில் அதைசெயலில் காட்ட வேணடும் என அவர் கூறினார்.
பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருப்பதால் பாகிஸ்தானை தாக்க மாட்டோம் என யாரும் நினைத்துவிடவேண்டாம் என்று இந்தியா கூறிவிட்டது. இதனால் போர் ஏற்பட்டால் தீவிரவாதிகளைத் தேடி பாகிஸ்தானில் உள்ளஅமெரிக்கப் படையினரையும் திரும்பி அழைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படைகளுக்குத் துணையாக குவிக்கப்பட்டுள்ள தனதுபடைகளை பாகிஸ்தான், இந்திய எல்லை நோக்கி நகர்த்தி வருகிறது. இதற்கு அமெரிக்க எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
இது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவியாகப் போய்விடும் என்பதால் படைகளை அங்கிருந்து நகர்த்தவேண்டாம் என அமெரிக்கா கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications