மதுரை மாநகராட்சி ஆணையர் மீது செக்ஸ் புகார்
மதுரை:
மதுரை மாநகராட்சி ஆணையரான ஹர்சஹாய் மீனா மீது செக்ஸ் புகார் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக்கடிதம் அனுப்பியுள்ளார் அம்மாநகராட்சியின் திமுக மேயரான செ. ராமச்சந்திரன்.
சஹாய்க்கும் ராமச்சந்திரனுக்கும் எப்போதுமே ஒத்து வராது. சென்னையில் ஸ்டாலின்-கராத்தே தியாகராஜன்மோதுவது போல ராமச்சந்திரனும் சஹாயும் எப்போதும் மோதிக் கொண்டே இருப்பார்கள்.
மேயரை ஆணையர் மதிப்பதே இல்லை என்ற பேச்சும் மதுரை மாநகராட்சி வட்டாரத்தில் உண்டு. ஆனால் திமுகமேயராக இருக்கும் காரணத்தால் ராமச்சந்திரனுக்கு சாதகமாக அதிமுக அரசு தரப்பு எந்வொரு நடவடிக்கையும்எடுப்பதில்லை.
இந்நிலையில் சஹாய் மீது புதிதாக ஒரு செக்ஸ் புகார் வந்துள்ளது. மாநகராட்சியில் பணியாற்றும் பெண் டாக்டர்ஒருவரிடம் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் சஹாய் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி சம்பந்தப்பட்ட பெண் டாக்டரைத் தனது அறைக்கு அழைத்த சஹாய், அவரிடம் குடும்பக்கட்டுபாட்டு அறுவைச் சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
அப்போது அந்தப் பெண் டாக்டர் முகம் சுளிக்கும் வகையில் செக்ஸ் தொடர்பான சில கேள்விகளையும்அறுவறுக்கத்தக்க வார்த்தைகளையும் அவர் பிரயோகித்ததாக மேயரிடம் அந்தப் பெண் டாக்டரே கூறிஅழுதுள்ளார்.
இதையடுத்து கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டிய ராமச்சந்திரன், இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றுவிவாதித்தார். ஜெயலலிதாவுக்கு இதுகுறித்து விரிவான புகார் கடிதம் அனுப்பலாம் என்று அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து சஹாய் மீது பெண் டாக்டர் கூறிய புகாரை ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்ராமச்சந்திரன்.
இந்தப் புகாரால் மதுரையில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் இதுபோன்றபாலியல் புகார் மதுரை மாநகராட்சி வளாகத்தில் எழுந்தது. அதுகுறித்த விசாரணை இன்னும் முடிவடையாதநிலையில் ஆணையர் மீதே புகார் எழுந்திருப்பது மதுரை மாநகராட்சி குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் சென்னை வந்த ராமச்சந்திரன் ஜெயலலிதாவைச் சந்தித்து மதுரை மாநகராட்சிக்கு நிதி வேண்டிகோரிக்கை விடுத்திருந்தார்.
அதிமுகவுடன் ராமச்சந்திரன் வெகு வேகமாக நெருங்கி வருவதாகவும் அதற்காகத் தான் அவருக்குஜெயலலிதாவைச் சந்திக்கும் வாய்ப்பு உடனடியாகக் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.
எனவே ராமச்சந்திரனை எப்படியும் அதிமுகவுக்குள் இணைத்து விட வேண்டும் என்பதற்காக சஹாய் மீதுஜெயலலிதா உடனடி நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications