அணு ஆயுதப் போர் வராது என்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வராது என்று பாகிஸ்தான் ராணுவஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் கூறினார்.
சி.என்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியின் போது முஷாரப் இவ்வாறு கூறினார்.
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அணு ஆயுதப் போர் குறித்து யாருமே நினைத்துக் கூடப் பார்க்க வேண்டியஅவசியமில்லை. இரு நாடுகளுமே அணுகுண்டுகள் வைத்திருப்பதால் விளைவுகள் ஏற்படும் என்றுஅனைவருக்குமே தெரியும். எனவே அணுகுண்டு வீச வேண்டிய கட்டாயத்திற்கு இரு நாடுகளுமே போகாதுஎன்றார் முஷாரப்.
வரும் 4ம் தேதி கஜாகிஸ்தானில் உள்ள அல்மாட்டி மாநாட்டின் போது நான் இந்தியப் பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கவிரும்புகிறேன். ஆனால் அது அவருடைய கையில் தான் உள்ளது என்றும் முஷாரப் கூறினார்.
ஆனால் முஷாரப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் வாஜ்பாய் சந்திக்கப் போவதில்லை என்று இந்தியாஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது.
கஜாகிஸ்தான் கிளம்பினார் வாஜ்பாய்:
இதற்கிடையே வாஜ்பாய் இன்று காலை கஜாகிஸ்தான் கிளம்பிச் சென்றார்.
பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்கக் கூடாது என்பதால் வாஜ்பாய் ஈரான் வழியாகச் சுற்றிக்கொண்டு செல்வதால் ஏழு மணி நேரம் அவர் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
21 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சரண்:
இந்நிலையில் காஷ்மீரில் நேற்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 21 தீவிரவாதிகள் நேற்றுசரணடைந்தனர்.
இந்திய ராணுவத்திடம் சரணடைந்த அந்தத் தீவிரவாதிகள் தங்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்களையும்ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்திய தூதரக அதிகாரி விடுவிப்பு:
இதற்கிடையே பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரியான குல்வந்த் சிங் நேற்று மாலைவிடுவிக்கப்பட்டார்.
நேற்று காலை 11.30 மணிக்கு 10 பேர் கொண்ட ஒரு கும்பல் அவருடைய வீட்டுக்கு அருகிலேயே அவரைக்கடத்திக் கொண்டு சென்றது.
இந்நிலையில் நேற்று மாலை குல்வந்த் சிங் பலத்த காயங்களுடன் விடுவிக்கப்பட்டார். சுமார் நான்கரை மணி நேரம்அவரைப் பிடித்து வைத்திருந்த கும்பல் ஒரு வாக்குமூலத்தில் கையெழுத்துப் போடச் சொல்லி சித்திரவதைசெய்துள்ளது.
முதுகிலும் மார்பிலும் பலத்த காயங்கள் பட்ட அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
யாரிடமிருந்தோ முக்கிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டிருந்த போது குல்வந்த் சிங் பிடிபட்டார் என்றுபாகிஸ்தான் ஒரு நொண்டிச் சாக்கைக் கூறியுள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ் மக்கள் வெளியேற அறிவுரை:
இதற்கிடையே இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால்அவர்கள் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டுத் தூதரக அதிகாரிகள்மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருப்பார்கள் என்றும் அந்நாடுகள் கூறியுள்ளன.
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளைச் சேர்ந்த மக்கள்இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்துபெரும்பாலான மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications