3 தொகுதிகளிலும் மறு தேர்தல் கோருகிறார் ராமதாஸ்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளிலுமே நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனரான ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மூன்று தொகுதிகளிலுமே வெளி மாநிலப் போலீசாரைப் பாதுகாப்புக்கு நிறுத்தி மறு தேர்தலை நடத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக வரலாற்றில் இந்த இடைத் தேர்தலில் ஏற்பட்ட முறைகேடுகள் போல எப்போதும் நடந்ததே கிடையாது.அந்த அளவுக்கு போலீசாருடன் சேர்ந்து கொண்டு ஆளும் கட்சியினர் ஜனநாயகத்தைப் படுகொலைசெய்துள்ளனர்.
தேர்தல் கமிஷனோ அவர்கள் அனுப்பிய பார்வையாளர்களோ இந்த முறைகேடுகளைக் கண்டு கொண்டதுபோலவே தெரியவில்லை.
தங்களுடைய ஆட்சியின் போது நடக்கும் எந்தத் தேர்தலிலும் வேறு எந்தக் கட்சியும் வெற்றி பெறவே கூடாது என்றபுதிய தத்துவத்துடன் இந்த ஜனநாயகப் படுகொலையை அதிமுக அரசு அரங்கேற்றியுள்ளது.
இந்தப் படுகொலைக்கு மாநிலப் போலீசாரும் கைக்கருவியாக மாறி செயல்பட்டது தான் மிகவும்வேதனைக்குரியது, கண்டனத்துக்கும் உரியது.
இப்படியொரு தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக ஆளுங்கட்சிக்கு எதிராக வேறு யாரும் போட்டியிடக் கூடாதுஎன்று அறிவித்து விட்டால் நேரமும் உழைப்பும் பணமும் மிச்சமாகும்.
பிகார் பாணியில் அமைச்சர்களே வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர்.அண்மையில் பாகிஸ்தானில் அந்நாட்டின் சர்வாதிகாரியான பர்வேஸ் முஷாரப் நடத்தி முடித்த தேர்தலையும் இந்தஇடைத் தேர்தல் சம்பவங்கள் நினைவுபடுத்தியுள்ளன என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ராமதாஸ்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications