திமுக-பாமக எம்.பிக்கள் டெல்லியில் உண்ணாவிரதம்
டெல்லி:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் போலீஸாரின் துணையோடு அதிமுகவினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அதைக்கண்டித்து டெல்லியில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பா.ம.க. எம்.பிக்கள் திங்கள்கிழமை டெல்லியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
இதன் பின்னர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவைச் சந்தித்து சைதாப்பேட்டையில் மறு தேர்தல் நடத்தக் கோரி மனுகொடுத்தனர்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர் அராஜக வன்முறையில் ஈடுபட்டதாகவும், வெற்று சாதிச்சான்றிதழை கள்ள ஓட்டுப் போடும் அதிமுகவினருக்கு ஆயிரக்கணக்கில் வினியோகம் செய்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளதாகவும்திமுக குற்றம்சாட்டி உள்ளது. சைதை தொகுதி முழுவதிலும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில் மத்திய தேர்தல் கமிஷனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் டெல்லியில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவுவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
திமுகவின் போராட்டத்தில் தானும் கலந்து கொள்ளப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும் கட்சியின்எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொள்வர் என்று பாமக தெரிவித்துள்ளது. அவர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவே டெல்லி சென்றுவிட்டனர்.
இன்று காலை ஜந்தர்மந்தர் சாலையில் அவர்கள் உண்ணாவிரதப் போராடத்தைத் தொடங்கினர். திமுகவினருடன் பா.ம.கவினரும் இந்தப்போராட்டதில் கலந்து கொண்டனர்.
இன்று மாலை உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பின்னர் திமுக எம்.பிக்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து சைதாப்பேட்டைதேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் கொடுத்தனர். அந்த மனுவில், மீண்டும் சைதாப்பேட்டையில் தேர்தல் நடத்த வேண்டும். அனைத்துவாக்குச் சாவடிகளிலும வீடியோ கேமராக்களை வைத்து தேர்தலை கண்காணிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்திக்க திட்டம்:
இதற்கிடையே ஜனாதிபதி கே.ஆர். நாராயணனைச் சந்தித்து புகார் மனு தர பாட்டாளி மக்கள் கட்சிதிட்டமிட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications