பணிகிறார் முஷாரப்: தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் போர் மிரட்டல் மற்றும் சர்வதேச நெருக்குதல் காரணமாக லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும்ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாதிளை இந்தியாவுக்குள் செல்லாமல் தடுக்குமாறு தனது படையினருக்கு பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளர் முஷாரப் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு நெருக்கமான அமைப்புகள் இந்தசெய்தியை உறுதி செய்ததாக த ஹிந்து நாளிதழ் கூறுகிறது.
லஷ்கர்-ஏ-தொய்பா முழுக்க முழுக்க ஐ.எஸ்.ஐ. மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவண்ணம் செயல்பட்டுவருவதால் அவர்களை கஷ்டப்பட்டாவது முஷாரபால் கட்டுப்படுத்திவிட முடியும்.
ஆனால், ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பு பலவிதமான மத அமைப்புகள் உதவியுடன் நடத்தப்படுகிறது. இந்தஅமைப்பு முஷாரபின் உத்தரவை மீறும் என்று தெரிகிறது.
இந் நிலையில் தீவிரவாதிகளுக்கு உதவி வரும் 15 மதரசஸாக்களுக்கு (மதப் பள்ளிகள்) பாகிஸ்தான் அரசு நிதிஉதவியை நிறுத்தியுள்ளது.
சர்வதேச நெருக்குதலுக்கு பயந்து தங்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் அதை எதிர்த்துப்போராடவும் எதிர்கொள்ளவும் தீவிரவாதிகள் தயாராகி வருகின்றனர்.
லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் அமைப்பின் தலைவர்கள் சமீபத்தில் ரகசியமாய் சந்தித்துப் பேசியிருப்பதாகவும்கூறப்படுகிறது.
தீவிரவாதிகளுக்கு எதிராக முஷாரப் நடவடிக்கை எடுத்து வருவதை இந்திய உளவுப் பிரிவுகளும் உறுதிசெய்துள்ளன. இதனால் தான் பாகிஸ்தானின் செயல்களில் மாற்றம் தெரிந்தால் நிச்சயம் அந் நாட்டுடன் பேசுவோம்என கஜாகிஸ்தான் புறப்படும் முன் பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடன் இனி பேச்சை இல்லை என்று கூறி வந்த இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட முஷாரப் சிலநடவடிக்கைகளை எடுத்துள்ளது தான் காரணம் என்று தெரிகிறது.
ஜம்மூவில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந் நிலையில் காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்பட்டு வெடித்து சேதம் ஏற்படுத்துவதற்கு முன் அழிக்கப்பட்டது.
காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் தனமாண்டி என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால்சுட்டுவிட்டு தப்பியோடிய 2 தீவிரவாதிகளை படையினர் விரட்டிச் சென்று சுட்டுக் கொன்றனர்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒருவன் பைசலாபாத்தைச் சேர்ந்த அபு பகால், இன்னொருவன்குஜ்ரன்வாலாவைச் சேர்ந்த அபு சுகைல். இவர்களிடம் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
தோடா மாவட்டத்தில் பாஜா கிராமத்தில் ரோட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர்கண்டுபிடித்து அழித்தனர். இதனால் வாகனங்களுக்கு ஏற்பட இருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீவிரவாதமும், மதவாதமும்: வாஜ்பாய் பேச்சு:
கஜாகிஸ்தானில் இன்று அந் நாட்டு அதிபருடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர் நிருபர்களிடம் பேசியபிரதமர் வாஜ்பாய்,
மதவாதத்தையும் தீவிரவாதத்தையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. இந்தியாவின் நிலையைகஜாகிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.
இங்கு நடக்கும் மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிராக முக்கியமான தீர்மானமும் நிறைவேற்றப்படும். போதைமருந்துக் கும்பல்களும், ஆயுத வியாபாரிகளும் தான் தீவிரவாதத்துக்கு துணை போகின்றனர். போதை மருந்துகும்பலின் வேலையை சில நாடுகளும் (பாகிஸ்தான்) செய்கின்றன.
அமெரிக்கா தலையிடுவதா? சீனா:
இதற்கிடையே, தெற்காசியாவில் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்சனையில் அமெரிக்கா அதிகமாகதலையிடுவதாக சீனா கூறியுள்ளது.
பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இதன் மூலம் இந்தியாவுக்கு உதவும் அமெரிக்காவை கண்டித்துள்ளதாகஅரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உதவுவதற்காக அமெரிக்கா அக்கறை காட்டவில்லை.அமெரிக்கா தனது சில சுய நலத் திட்டங்களை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது என சீன அரசுசெய்தி நிறுவனமான ஜின்ஹூகா கூறியுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் அமைதி வேண்டுமானால் இந்தியாவுடன் சேர்ந்து ஏன் அமெரிக்கா சமீபத்தில் போர் பயிற்சிநடத்தியது என்று கேட்டுள்ள சீனா, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தனது படைகளை இந்திய எல்லைக்குபாகிஸ்தான் அனுப்பி வருவதை அமெரிக்கா எதிர்ப்பது தவறு என்றும் கூறியுள்ளது.
கஜாகிஸ்தான் மாநாட்டில் பாகிஸ்தானுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளதால் தனது நட்புநாடான பாகிஸ்தானுக்கு சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயையும் சந்திக்க விருப்பம் தெரிவித்தார் சீன அதிபர் ஜியாங்ஜெமின்.இதனால் தனது பயணத் திட்டத்தை ஒரு நாள் அதிகரித்தார் வாஜ்பாய்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications