பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன் வர வேண்டும்: முஷாரப்
அலமாட்டி (கஜாகிஸ்தான்):
நாங்கள் போரை விரும்பவில்லை. எங்களுடன் பேச்சு நடத்த இந்தியா முன் வர வேண்டும் என பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
கஜாகிஸ்தானில் ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய முஷாரப் வழக்கம்போல் காஷ்மீர் விவகாரத்தை இழுத்தார்.
முஷாரப் பேச்சு விவரம்:
நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. எங்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்குஇந்தியா முன் வர வேண்டும். நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், இந்தியா எல்லையில் பதற்றத்தைஅதிகரித்து வருகிறது.
போரை நாங்கள் விரும்பாவிட்டாலும் எங்கள் மீது அது திணிக்கப்பட்டால் எதிர்த்துப் போரிடுவோம். எங்கள்நாட்டை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம்.
காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேச இந்தியா முன் வர வேண்டும். காஷ்மீர் மக்களின் அபிலாஷைகள், ஐ.நா.நிறைவேற்றிய காஷ்மீர் தீர்மானம் குறித்து பேச இந்தியா மறுக்கிறது. இதனால் தான் தெற்காசியாவில் பதற்றம்அதிகரித்து வருகிறது.
தீவிரவாதத்தை ஆதரிக்க பாகிஸ்தான் தயாராக இல்லை. அதே நேரத்தில் சில பகுதிகளை சில நாடுகள்ஆக்கிரமித்துள்ளதையும் அதை நாங்கள் எதிர்ப்பதையும் தவறான கொள்கை என்று கூறக் கூடாது. உரிமைகள்மறுக்கப்படும்போது தீவிரவாதம் தலைதூக்குகிறது. தீவிரவாதத்தை ஒழிக்க அதன் அடிப்படைக் காரணத்தை ஆராயவேண்டும் (மீண்டும் தீவிரவாதிகளை ஆதரித்தே பேசினார்).
ஆக்ராவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர முயன்றேன்.ஆனால், அந்த மாநாடு தோல்வியடைந்தது என்றார் முஷாரப்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications