பா.ம.கவிலிருந்து 2-வது தலித் எம்.எல்.ஏ. விலகல்
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து தான் விலகி விட்டதாகவும், தனித்து செயல்படப் போவதாகவும் வந்தவாசி தொகுதியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் அறிவித்துள்ளார். இவர் தலித் இனத்தைச் சேர்ந்தவர்.
இடைத் தேர்தல் முடிந்தவுடன் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகஆரம்பிப்பார்கள் என்று உங்கள் "தட்ஸ்தமிழ்.காம்" செய்தி வெளியிட்டது.
அது இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது. கட்சிக்குள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்ட தலித் எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன்கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். தனித்து செயல்படப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். டாக்டர் ராமதாஸ் மீது சரமாரியாகபுகார்களையும் அவர் அடுக்கியுள்ளார்.
மதுரையைச் சொந்த ஊராகக் கொண்ட முருகவேல் ராஜன், டாக்டர் ராமதாஸால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். தென் மாவட்டத்தைச்சேர்ந்தவரான அவரை வந்தவாசி தொகுதியில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏவாக்கினார் ராமதாஸ்.
வன்னியர்களின் கட்சியாக வர்ணிக்கப்படும் பாட்டாளி மக்கள் கட்சியில் தலித்களுக்கு அதிக மரியாதை இருப்பதில்லை என்ற புகார் நீண்டகாலமாகவே உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை இதே புகாரைக் கூறியே கட்சியை விட்டு விலகினார். பின்னர் அவர்அதிமுகவில் சேர்ந்து திருச்சி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போது மற்றொரு தலித் மக்கள் பிரதிநிதியான முருகவேல் ராஜன் பாமகவை விட்டு விலகியுள்ளார்.
சட்டசபையில் பாமகவிற்கு மொத்தம் 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் ஏற்கனவே சிவகாமி வின்சென்ட் எம்.எல்.ஏபாமகவிலிருந்து விலகுவதாக கூறி தனித்துச் செயல்பட்டு வருகிறார்.
இப்போது முருகவேல் ராஜனும் விலகி விட்டார். இதன்மூலம் பாமக எம்.எல்.ஏக்களில் 2 பேர் அக்கட்சிக்கு விரோதமாக மாறியுள்ளனர்.சிவகாமி இன்னும் பாமகவிலிருந்து விலக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications