எஸ்.எஸ்.எல்.சி: தோல்வியடைந்தவர்களுக்கு உடனே மறுதேர்வு
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் பெயில் ஆனவர்கள் சிறப்பு துணை தேர்விற்குவிண்ணப்பிக்கலாம். இந்த துணை தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், இந்த ஆண்டு முதலே தங்கள் உயர்படிப்பை தொடரலாம்என்று அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக வந்துள்ள இத் திட்டம் குறித்து தேர்வுத் துறை இயக்குனர் சி. பழனிவேலு கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் பெயில் ஆனவர்கள் சிறப்பு துணை தேர்விற்குவிண்ணப்பிக்கலாம். இந்த துணை தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், இந்த ஆண்டு முதலே தங்கள் உயர்படிப்பை தொடரலாம்.
இந்த தேர்வு எழுதி பயன் பெற விரும்புபவர்கள், இன்று முதல் இம்மாதம் 8 -ம் தேதிக்குள், சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரியைசந்தித்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஒரு பாடமானாலும், இரண்டு பாடங்களானாலும் 125ரூபாய் தேர்வுக் கட்டணம்செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தேர்வு இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் நடத்தப்படும். தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
இதே போல் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இன்டியன் மாணவர்களுக்கு இந்த தேர்வு எழுதி பயன் பெறலாம், மெட்ரிக் மாணவர்கள்ஒரு பாடத்திற்கு 135 ரூபாயும் இரண்டு பாடங்களுக்கு 235 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆங்கிலோ இன்டியன் மாணவர்கள் ஒரு பாடத்திற்கு 85 ரூபாயும் இரண்டு பாடங்களுக்கு 135 ரூபாயும் கட்டணமாக செலுத்தவேண்டும்.
ப்ளஸ் 2 தேர்வில் விடைத்தாளின் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, இம்மாதம் 7ஆம் தேதிக்குள் விடைத்தாள்களின் நகல்அனுப்பி வைக்கப்படும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நகல் கிடைத்த 2வேலைநாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு பழனிவேலு தெரிவித்தார்.
இதனால் எஸ்.எஸ்.எல்.சியில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஓராண்டை வீணாக்க வேண்டியஅவசியமில்லை. மீணடும் உடனே தேர்வெழுதி வென்று இந்த ஆண்டே பிளஸ் ஒன்னில் சேர்ந்துவிடலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications