சென்னையில் மாடி பஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மேலும் ஒரு வழித்தடத்தில் மாடி பஸ் எனப்படும் டபுள் டெக்கர் பஸ் விடப்பட்டுள்ளது.
மும்பையைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலும் மாடி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இருப்பினும் பாரிமுனை முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் மட்டுமே இந்த மாடி பஸ்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதுபோன்ற மொத்தம் நான்கு மாடி பஸ்கள் இந்த வழித் தடத்தில் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் மாடி பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து அதன்மேற்குப் பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாரிமுனை முதல் அண்ணாநகர் மேற்கு வரை புதிதாக மாடி பஸ் சேவை தொடங்கியுள்ளது. 2 பஸ்கள் சோதனைமுறையில் இந்த வழித் தடத்தில் விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications