நிலம் தர மறுத்த பாட்டி, சித்தியைக் கொன்றவர் தலைமறைவு
ராசிபுரம்:
சொத்துக்களைக் கொடுக்க பாட்டி மறுத்ததால் அவரது பேரனே அவரை அடித்துக் கொன்றார். அதைத் தடுக்கமுயன்ற சித்தியையும் அந்த நபர் அடித்துக் கொன்றார்.
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது முத்துகாளிப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்பெருமாயி. இவரது பேரன் செந்தில்.
பெருமாயிக்கு 2.4 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. பெருமாயிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தசொத்துக்களை இன்னும் பெருமாயி தனது மகள்களுக்கு பிரித்துக் கொடுக்கவில்லை.
இதற்கிடையே பெருமாயியின் பேரன் செந்தில் 2.4 ஏக்கர் நிலத்தையும் தனக்கே கொடுக்குமாறு அடிக்கடி கேட்டுவந்தார். ஆனால் பெருமாயி கொடுக்க மறுத்து விட்டார். மேலும் செந்திலுக்கு நிலத்தைக் கொடுப்பதற்குபெருமாயியின் இரண்டாவது மகள் மாதேஸ்வரியும் ஆட்சேபித்திருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பாட்டி வீட்டுக்கு வந்த செந்தில் நிலத்தைக் கொடுக்க முடியுமா, முடியாதாஎன்று கேட்டுள்ளார். ஆனால் பெருமாயி நிலத்தைத் தர திட்டவட்டமாக மறுத்து விட்டார். உடனிருந்தமாதேஸ்வரியும் செந்திலைத் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில், அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து இருவரையும் தாறுமாறாகஅடித்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். அதன் பின்னர் செந்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.
ராசிபுரம் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications