இலங்கையிலிருந்து வந்த சரக்குக் கப்பலில் ஒளிந்திருந்த நபர் கைது: தீவிரவாதியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆப்பிரிக்காவில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்த சரக்கு கப்பலில் ஒளிந்திருந்த மர்ம நபரைப் பிடித்துபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எம்.வி. பார்கர் என்ற சரக்கு கப்பல் பல்வேறு நாடுகளைச் சுற்றி விட்டு பின் இலங்கைவழியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைந்தது. சென்னை வந்த கப்பலில் உள்ளகண்டெய்னர்களை இறக்கும் பணியில் கப்பல் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கண்டெய்னர்களுக்கிடையில் ஒரு மர்ம நபர் ஒளிந்திருந்தார். கப்பல் ஊழியர்கள அவனைப் பிடித்துகப்பல் கேப்டனிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

கேப்டன் அந்த மர்ம நபரை விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைக் கூறியதால்,கேப்டன் சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சென்னை மாநகர இணை கமிஷ்னர் சைலேந்திர பாபுதலைமையிலான போலீஸ் படையினர் அந்த மர்ம நபரைப் பிடித்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் முகமது கபீர் உசேன் (24) என்றும், இலங்கை தலைநகர் கொழும்புவில்வேலை பார்த்து வந்தவர் என்றும், வேலை தேடி செனனைக்கு வந்ததும் தெரிய வந்தது.

இவர் தீவிரவாதி அல்ல என்பதை உறுதிப்படுத்திய சைலேந்திர பாபு, விசாரணை முழுவதும் முடிந்த பின்னர்இலங்கை தூதரகம் மூலம் அந்த நபர் மீண்டும்கொழும்புவுக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+