மனைவிகள் ஜாக்கிரதை": 3 திருமணங்கள் செய்த கட்டிட மேஸ்திரி கைது

Subscribe to Oneindia Tamil

திருக்கோவிலூர்:

இரு மனைவிகள் இருந்தும் அவர்களை விட்டு விட்டு 3-வதாக கல்யாணம் செய்து கொண்ட கணவரை தட்டிக் கேட்ட 2-வதுமனைவியை தீ வைத்துக் கொளுத்துவதாக மிரட்டிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் கட்டிட மேஸ்திரியாவார். ஹரிதாஸ் என்ற இந்த நபர் திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ளதிருக்கோவிலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

ஹரிதாஸுக்கும், கவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. நல்ல சீர், செனத்தியுடன்விமரிசையாக திருமணம் நடந்தது. அதன் பின் ஹரிதாஸ் தம்பதி திருக்கோவிலூருக்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கியது.

இந் நிலையில் வரதட்சணை போதாது என்று கூறி கவிதாவை அவரது பெற்றோர் வீட்டுக்குத் துரத்தி விட்டார் ஹரிதாஸ்.இதையடுத்து சென்னை மேடவாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார் கவிதா. அப்போது ஹரிதாஸ் குறித்து அவரதுபெற்றோர் விசாரித்தபோது தான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் தங்கள் மகளை 2வது திருமணம் செய்திருப்பதும்தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த கவிதா, இப்படிப்பட்ட கணவருடன் வாழ்வதற்குப் பதில் பெற்றோருடனேயே இருந்து விடலாம் என்றுநினைத்து அம்மா வீட்டிலேயே இருந்து விட்டார்.

இந் நிலையில் ஹரிதாஸ் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தகவலை அறிந்து அதிர்ந்து போனகவிதா திருக்கோவிலூருக்குப் புறப்பட்டுப் போனார்.

ஹரிதாஸிடம் போய் நியாயம் கேட்டபோது, மரியாதையாக போய் விடு, இல்லாவிட்டால் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன்என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேலுவிடம்புகார் கொடுத்தார் கவிதா.

புகாரை ஏற்ற எஸ்.பி., இதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விசாரணை நடத்திய போலீஸார்,புகாரில் உண்மை இருப்பதை அறிந்து ஹரிதாஸைக் கைது செய்தனர். இப்போது மத்திய சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் ஹரிதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+