முதலில் முன்னணியில் இருந்த திமுக
சென்னை:
சைதாப்பேட்டை சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. 9மணியளவில் 2 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டப்பட்டன.
அந்த நிலையில் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியம் 8 ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.
ஆனால், அதிமுக வேட்பாளர் ராதாரவி சிறிது நேரத்தில் ஓவர்-டேக் செய்துவிட்டார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது அவர்345 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை விட அவர் முன்னணிக்கு வந்துவிட்டார்.
சைதாப்பேட்டையில் கடந்த 31ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. அப்போது ஆளுங்கட்சியினர் ஏராளமானதில்லுமுல்லுகளில் ஈடுபட்டதாக கூறி திமுகவினர் புகார் கூறினர், போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து 3 நாள் ஆய்வுக்குப் பின் 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடந்தது.
9 மணி நலவரப்படி திக வேட்பாளர் சுப்ரமணியம் 4068 வாக்குகள் பெற்றிருந்தார். அதிக வேட்பாளர் ராதாரவி 4060 வாக்குகள்பெற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications