நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் போலீஸாரின் உத்தரவின்படி சத்தியமங்கலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு நக்கீரன் ஆசிரியர் கோபால் நேற்றுஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், அவர் ஆஜராகவில்லை.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலின் பெயரையும் போலீஸார் சேர்த்துள்ளனர். இதையடுத்து சமீபத்தில்அவருக்கு போலீஸார் ஒரு நோட்டீஸ் அனுப்பினர். வியாழக்கிழமைக்குள் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜராக அவர்கள்உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து கடைசி நாளான வியாழக்கிழமை கோர்ட்டில் கோபால் ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோபால்வரவில்லை.

கோபால் தற்போது உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனில் இருக்கிறார். ஆனால் போலீசாரின் விசாரணைக்குத் தேவைப்படும்போதுகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சத்தியமங்கலம் கோர்ட்டுக்கு கோபால் வரவில்லை. இந் நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் பாதுகாப்பு கோரி கோபால் மனுசெய்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, தான் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால், போலீஸார் அனுப்பியசம்மனை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்திலும் கோபால் தரப்பில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் நக்கீரன் நிருபர்:

இதற்கிடையே ஈரோடு மாணவர் கொலை வழக்கில் நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்ககோவை ஐந்தாவது ஜூடிசியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த மாணவன் பக்தவச்சலம் என்பவர் வீரப்பனின் காட்டில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில்சிவசிப்பிரமணியத்தையும் போலீசார் சேர்த்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சிவசுப்ரமணியம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்தக் கொலை குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்று சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, சிவசுப்ரமணியத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். விசாரணையின்போதுசிவசுப்ரமணியத்தை சித்திரவதை செய்யவோ, மிரட்டவோ கூடாது என்றும் போலீஸாருக்கு நிபந்தனையும் விதித்தார் நீதிபதி.

எனவே இன்று மட்டும் சிவசுப்பிரமணியத்திடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு மீண்டும் இன்றே கோர்ட்டில் அவரைஆஜர்படுத்தப்படுத்தியாக வேண்டும்.

தங்கள் பத்திரிக்கையில் தொடர்ந்து அதிமுக மற்றும் ஜெயலலிதா, சசிகலா குறித்து செய்திகள் வெளியிட்டு வருவதால் தங்களைஜெயலலிதா போலீசாரை விட்டு துன்புறுத்தி வருவதாக நக்கீரன் கோபால் கூறியுள்ளார்.

சிவ சுப்பிரமணியத்தை சம்பந்தமேயில்லாமல் ஒரு கொலை வழக்கில் போலீசார் சேர்த்திருப்பதாக பத்திரிக்கையாளர்களும் கூறுகின்றனர்.இதை எதிர்த்து பத்திரிக்கையாளர்கள் சமீபத்தில் போராட்டமும் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+