மாநகராட்சி மேயர் VS
மதுரை:
மதுரை மாநகராட்சி ஆணையர் ஹர்சஹாய் மீனாவுக்கும், மேயர் செ.ராமச்சந்திரனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் மதுரையில்எந்தவிதமான வளர்ச்சித் திட்டமும் அமலாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அத்தோடு யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போய் திரிவதால் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துப்போய்க் கிடக்கிறது.
சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலினுக்கும் ஆணையர்களுக்கும், துணை மேயருக்கும் இருந்து வரும் மோதல் உலகறிந்த விஷயம்.
இப்போது மதுரை மாநகராட்சியிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. கமிஷ்னரை ஒடுக்குவதற்காக அவர் மீது மேயரின்ஆதரவாளர்களால் செக்ஸ் புகார் கூட செட்-அப் செய்யப்பட்டது. அது தவறான புகார் என்பது தெரிந்துவிட்டது.
தன் மீது தவறான குற்றம் சுமத்தி பெயரைக் கெடுக்க முயன்றதால் கடுப்பில் உள்ள கமிஷ்னர் இப்போது மேயரையும் அவருக்கு ஆதரவானகவுன்சிலர்களையும் இன்னும் அதிக காட்டத்தோடு நடத்த ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், கவுன்சிலர்களை ஆணையர் ஹர்சஹாய் மீனா மதிப்பதேயில்லை என்று புகார்கூறப்பட்டு வருகிறது. இப்போது அவர் மீதான புகார் மேலும் வலுத்துவிட்டது.
ஆளும்கட்சி, எதிர்க் கட்சி என்று பார்க்காமல் பணம் சுருட்ட நினைக்கும் எல்லோரையுமே கமிஷ்னர் கட்டுபபடுத்துவதாகக் கூறப்படுகிறது.இதனால், திமுக, அதிமுக என கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் அவரை குறை கூறி வருகின்றனர்.
கமிஷ்னர் பொறுப்புக்கு வந்தது முதலே ஹர்சஹாய் மீனா, மேயர் ராமச்சந்திரனை மதிப்பதில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. எந்தவிஷயமாக இருந்தாலும் மேயரை கலந்து ஆலோசித்த பிறகுதான் செய்ய வேண்டும் என்ற மரபு இருந்தாலும் அதை ஹர்சஹாய் மீனாகடைப்பிடிப்பதில்லை.
இதனால் மேயரும், கமிஷ்னரிடம் எதுவும் கேட்பதில்லை.
வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து கமிஷ்னரிடம் கவுன்சிலர்கள் விசாரிக்கப் போனால் அவர்களை பார்க்கவே ஹர்சஹாய் மீனாமறுப்பதாக கவுன்சிலர்கள் புலம்புகிறார்கள்.
இந்த மோதலால் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய்க் காணப்படுகிறது. ஒரு நலத் திட்டம் உருப்படியாக நடக்கவில்லை.
சமீபத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் குழுவுடன் சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் மேயர் ராமச்சந்திரன்.மதுரை நகரின் வளர்ச்சித் திட்டத்திற்குத் நிதி ஒதுக்கித் தருமாறு அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
யாருமே எதிர்பாராத வகையில் மதுரை வளர்ச்சிக்கு முதல் கட்டமாக கடந்த வாரம் ரூ. 2 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
ஆனால் இந்த மோதல் காரணமாக பணத்தை செலவிடுவது தொடர்பான திட்டங்களை தீட்ட முடியாமல் மாநகராட்சி கவுன்சில் முழித்துக்கொண்டுள்ளது, ஆணையரின் ஒத்துழைப்பின்மையே இதற்குக் காரணம் என்கின்றனர் கவுன்சிலர்கள்.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவே தலையிட்டு ஆணையருக்கும், மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்சனையைஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மதுரை நகர மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications