சாப்பாட்டு பிரச்சனை: மணப்பெண்ணின் தந்தைக்கு அரிவாள் வெட்டு- மாப்பிள்ளை கைது
சென்னை:
கல்யாண சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் மணமகளின் தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கல்யாணமும் நின்றது.மணமகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே உள்ள பல்லாவரத்தைச் சேர்ந்த சாமிநிாதன் என்பவருக்கும், உத்திரமேரூரைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுக்கும்திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று கல்யாணம் நடப்பதாக இருந்தது.
இதையொட்டி நேற்று முன் தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது மணமகன் வீட்டார் சாப்பாட்டுக்கு ஏற்பாடுசெய்திருந்தனர். ஆனால் சாப்பாடு சரியில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெண்ணின் அண்ணன் செல்வகுமாரிடம் விருந்தினர்கள் புகார் செய்துள்ளனர். இதையடுத்து என்ன மாப்பிள்ளே, சாப்பாடுசரியில்லாமல் போய் விட்டதே என்று சாமிநாதனிடம், செல்வகுமார் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த சாமிநாதன், செல்வகுமாரை தாறுமாறாக திட்டியுள்ளார். இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்துமாப்பிள்ளை சாமிநாதனை பெண்ணின் அண்ணன் செல்வகுமார் அடித்துள்ளார்.
இதையடுத்து வெளியே சென்ற சாமிநாதன் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களை அழைத்து வந்து செல்வகுமாரை சரமாரியாகதாக்கியுள்ளார். இதை விலக்க வந்த மணப் பெண்ணின் தந்தையை மாப்பிள்ளை சாமிநாதனே அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கல்யாண வீட்டில் நடந்த இந்த வன்றைக் கலாட்டாவால் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் போலீஸாருக்குப் புகார் கொடுத்தனர்.போலீஸார் விரைந்து வந்து மாப்பிள்ளை சாமிநாதன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
இதனால் கல்யாணம் நின்று போய்விட்டது. ஆட்டோ டிரைவர் கும்பலால் தான் கலாட்டா பெரிதாகியுள்ளது. கல்யாண வீட்டில் இருகுடும்பத்தினர் இடையே நடந்த சண்டையில் கூலிக்கு வந்த இந்தக் கும்பல் தலையிட்டு கலாட்டாவை பெரிதாக்கியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications