சிறுமி கற்பழிப்பு: இரு வாலிபர்கள்- கட்டப் பஞ்சாயத்து கும்பல் கைது
ஊத்தங்கரை:
தண்ணீர் கேட்பது மாதிரி நடித்த இரு வாலிபர்கள் சிறுமியை கற்பழித்தனர். இதையடுத்து அந்தச் சிறுமியும்அவளது தாயும் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.
இதையடுத்து கற்பழித்த வாலிபர்களும் இவர்களுக்கு ஆதரவாக கட்டப் பஞ்சாயத்து பேசிய கும்பலும் கைதுசெய்யப்பட்டது.
ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது. இந்த ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி- கலைவாணியின்மகள் ஈஸ்வரி. சில நாட்களுக்கு முன் இந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மதி ஆகிய இருவரும் தண்ணீர் கேட்டுக் கொண்டு வீட்டுக்குவந்தனர். இந்தச் சிறுமி தண்ணீர் கொண்டு வருவதற்காக சமையல் கட்டுக்குள் சென்றாள்.
பின் தொடர்ந்து வந்த இந்த இரு வாலிபர்களும் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து இன்னொருஅறைக்குக் கொண்டு சென்றனர். கட்டிலில் தள்ளி அவளது வாயில் துணிவை வைத்து அடைத்தனர்.
பின்னர் இருவரும் அவளை கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து இந்தப் பெண்ணில் பெற்றோர் அந்த இரு நாய்களின் வீட்டிலும் போய் நியாயம் கேட்டனர்.ஆனால், அவர்கள் சில அடாவடி ஆசாமிகளைக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர்.
கொஞ்சம் பணம் தர்றோம். வாங்கிட்டு சும்மா இருக்கனும் என இவர்களை அந்தக் கும்பல் மிரட்டியது.
வசதியில்லாத இந்த குடும்பத்தினர் இதனால் மனமுடைந்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமியின் தாய் கலைவாணியும்,சிறுமி ஈஸ்வரியும் விஷம் குடித்தனர்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது தான்இந்த கற்பழிப்பு விவகாரம் வெளியில் தெரிந்தது.
இதையடுத்து ஊத்தங்கரை காவல் நிலையத்தினர் உடனடியாக செயல்பட்டு புகாரு பதிவு செய்தனர்.
கிராமத்துக்குள் நுழைந்து செந்தில்குமாரையும், மதியையும் கைது செய்தனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்த கட்டப் பஞ்சாயத்து கும்பலைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications