கஞ்சாவுக்காக போனுக்கு தடை: கீரிப்பட்டி அதிசயம்
மதுரை:
கஞ்சா பிசினஸ் போலீஸாருக்குத் தெரியாமல் இருப்பதற்காக பிரபல கிராமமான கீரிப்பட்டியில் யாரும் போன் வைத்துக் கொள்ளக் கூடாதுஎன்று ஊர்க் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது!!!
சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட இரண்டு கிராமங்கள் கீரிப்பட்டி மற்றும் பாப்பாப்பட்டி. ரிசர்வ் தொகுதிகளான இங்கு பஞ்சாயத்துத்தலைவர் தேர்தலில் தலித் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியாது என்று இன்னொரு ஜாதியினர் அடாவடி செய்தனர்.
அந்தச் செய்திகளால் இந்த கிராமங்கள் பிரபலமாகின. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு வழியாய் தேர்தல் நடத்தப்பட்டு தலித்கள்தலைவராகளாக தேர்வானார்கள். ஆனால், அவ்வாறு தேர்ந்தெடுத்த தலைவரையும் கூட ராஜினாமா செய்ய வைத்து விட்டார்கள் இந்தகிராமத்தில் உள்ள இன்னொரு அடாவடி ஜாதியினர்.
இந்த கிராமத்தில் ஒரு வித்தியாசமான ஊர்க் கட்டுப்பாடு இருக்கின்ற விவரம் இப்போது வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதைகிராமத்தில் உள்ள அத்தனை பேரும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
அதாவது, கீரிப்பட்டியில் 500 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர். ஆயினும் ஒரு வீட்டில் கூட போன் கிடையாது. தலித்களை பொறுத்தவரைஅவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்களால் வயிற்றுப்பாட்டுக்கே வழி இல்லை. போன் என்பது அவர்களால் நினைத்துப் பார்க்கமுடியாதது.
ஆனால், மற்ற ஜாதியினர் போன் வைத்துக் கொள்ளாததற்கு முக்கியக் காரணம், இங்கு கஞ்சா வியாபாரம் கொடி கட்டிப் பறப்பதுதான்.
இக் கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. வேண்டாத ஒருவர் குறித்து போலீஸாருக்கு யாரும் தகவல்தெரிவித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் போனே வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு போட்டுள்ளார்கள்.
பஞ்சாயத்து அலுவலகத்தில் கூட போன் கிடையாது.
சமீபத்தில் ஊர்க் கட்டுப்பாட்டை மீறி போன் இணைப்பு கோரி 4 பேர் மனு செய்திருந்தார். ஆனால் 4 பேருக்காக 40 லட்சம் செலவிடமுடியாது என்று கூறி டெலிபோன் துறை இணைப்பு கொடுக்க மறுத்து விட்டதாம்.
கீரிப்பட்டி முன்னேறுவது ரொம்ப கஷ்டம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications