இந்தியாவுக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி
வாஷிங்டன்:
பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டதாகவும், எல்லையில் ஊடுருவல்குறைந்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதனால் உடனடியாக பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்க வேண்டும் எனவும்வலியுறுத்தியுள்ளது.
ஆனால், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறைந்துவிட்டதாக கூற முடியாது என்று கூறியுள்ள இந்தியா,அதே நேரத்தில் பாகிஸ்தானின் செயல்களை வரவேற்பதாக அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளைத் தடுக்குமாறு தனது ராணுவத்தினருக்கு முஷாரப் உத்தரவிட்டுப்பதை எங்களது ராணுவமும் உறுதிசெய்துள்ளது என்று கூறியுள்ள இந்தியா, அதற்கேற்ப பதற்றத்தைக் குறைக்கும் செயல்களிலும் நாங்களும்ஈடுபடுவோம் என உறுதியளித்துள்ளது.
இப்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜிடம் இந்தஉறுதிமொழித் தரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உடனடி ராணுவத்தை எல்லையில் இருந்து வாபஸ் பெற மாட்டோம். உடனே பாகிஸ்தானுடன்பேச்சுவார்த்தையும் கிடையாது. வேறு வகைகளில் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுப்போம் எனவும்இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
அணு எரிபொருள் விவகாரம்:
இந் நிலையில் இந்தியாவின் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை இப்போது தர வேண்டாம் எனரஷ்யாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அணு ஆயத பரவல் சட்டத்தை சுட்டிக் காட்டி ரஷ்யாவை அமெரிக்கா நெருக்கி வருகிறது. கடந்த முறையும்இப்படிப்பட்ட நெருக்குதல் இருந்தது. இருப்பினும் அதையும் மீறி இந்தியாவுக்கு யுரேனியம் தந்தது ரஷ்யா.
இந்த முறை ரஷ்யா என்ன செய்யும் என்று தெரியவில்லை.
பாகிஸ்தானுக்கு சீனா உதவி:
இந்தியாவுடன் பிரச்சனையில் உள்ள பாகிஸ்தானுக்கு சமீபத்தில் ஏவுகணைகள் தொடர்பான சிலதொழில்நுட்பங்களை சீனா வழங்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள இந்த நிலையில் ஏவுகணைத் தொழில்நுட்பம் மட்டுமில்லால் ஏவுகணைகளைத்தயாரிக்க உதவும் கருவிகள், பொருள்களையும் கூட சீனா வழங்கியுள்ளது என அமெரிக்கா கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications