குடியரசுத் தலைவர் தேர்தல்: ஜெவுடன் வாஜ்பாய் ஆலோசனை
சென்னை:
குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பது குறித்து விவாதிக்க அதிமுக செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் கூடுகிறது.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் இன்று பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில் ஆலோசனை நடத்துவார் என டெல்லியில் பிரதமர்அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைத் தேர்தல் வெற்றிக்குப் பின் அதிமுக செயற்குழு திங்கள்கிழமை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கூடுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள்மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் நிலைகுறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அப்போது தனது இறுதி முடிவை பிரதமரிடம்ஜெயலலிதா தெரிவிப்பார். தமிழக திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கக் கோரி அவர் பிரதமரையும் திட்டக் கமிஷன் தலைவர் கே.சி.பந்தையும் சந்தித்துப் பேசுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்வில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்துக்கு கூடுதல் நிதியைப் பெற ஜெயலலிதா முயல்வார்என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications