மதுரை: போலி ஜாமீன் பத்திரங்கள் மூலம் தப்பிய குற்றவாளிகள்
மதுரை:
போலி ஜாமீன் பத்திரங்கள் மூலம் கொலைக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கணக்கான கைதிகள்விடுவிக்கப்பட்டுள்ள விவரம் மதுரையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீதிமன்றத்தில் ஜாமீன் தரப்பட்டது போல போலியான ஆவணங்களை ஒரு கும்பல் தயாரித்து கைதிகளை ஜாமீனில்விடுவித்து வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையில் உள்ள சில ஊழியர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுவதாக மதுரை காவல்துறை ஆணையர் சூர்ய பிரசாத் கூறியுள்ளார்.
மதுரை கமிஷ்னராக பொறுப்பேற்ற சூர்யபிரசாத் மதுரையை பீடித்துள்ள பல நோய்களை அகற்றி வருகிறார்.கட்டப் பஞ்சாயத்து மூலம் நீதி வழங்குவதாகக் கூறி எளிய மக்களை அடித்து உதைத்து பணம் பறிக்கும் கும்பலுக்குமுதலில் தடை போட்டார்.
இது தொடர்பாக அதிமுக, திமுக என அனைத்துக் கட்சி கட்டைப் பஞ்சாயத்து ஆசாமிகளையும் பிடித்து சிறையில்போட்டார். அடுத்தபடியாக அனியாய வட்டி மூலம் மக்களை வதைத்து வந்த கும்பலைக் கட்டுப்படுத்தினார்.
இப்போது அவரது விசாரணையில் சிக்கியுள்ள புதிய விவரம் போலி ஜாமீன் பத்திரங்கள் விவகாரம். இதுநீதித்துறையையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜாமீனில் சென்றவர்களி வழக்கு விசாரணைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். அவ்வாறு அந்த நபர் ஆஜராகாவிட்டால், அவருக்குப் பதிலாக அவருக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்தநபர் ஆஜராக வேண்டும்.
ஆனால், இப்படி பல வழக்குகளில் ஜாமீன் வாங்கித் தந்தவர்களின் விலாசத்தைத் தேடி போலீசார் சென்றபோதுஅந்த விலாசமே போலியானது என்பது தெரியவந்தது. அவர்கள் அளித்தாகக் கூறப்பட்ட சொத்துப் பத்திரங்களும்போலியானவை. மொத்தத்தில் போது இந்த ஜாமீன் பத்திரங்களே போலியானவை என்பது தெரியவந்தது.
இந்தப் பத்திரங்களில் தாசில்தார், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சீல் வைத்துகையெழுத்துப் போட வேண்டும். ஆனால், இதற்கான ரப்பர் ஸ்டாம்புகள் கூட போலியாக தயாரிக்கப்பட்டு போலிசீல்கள் வைக்கப்பட்டு அதிகாரிகளின் கையெழுத்துகள் கூட போலியாக போடப்பட்டுள்ளன.
இந்த போலி ஆவணங்கள் மதுரை நீதிமன்ற வளாகத்திலேயே தயாரிக்கப்பட்டவை என்பது தான் பெரும்அதிர்ச்சியூட்டும் விஷயம். நீதிமன்ற காம்புண்டுக்குள் அமர்ந்தே இந்தக் கும்பல் போலி ஆவணங்களைத் தயாரித்துகுற்றவாளிக்கு விற்று வந்துள்ளது.
கமிஷ்னர் சூர்யபிரசாத் நடத்திய விசாரணையில், இந்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டகுற்றவாளிகள் தப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், கிராம நிர்வாக அதிகாரிகளும் உடந்தையாகஇருந்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ராஜா முகம்மது, சுந்தர், ஆறுமுகம்,மணி, பாலசந்தர், கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் போலி சீல்கள்,போலி பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து முழு விசாரணை நடத்தி கும்பலை ஒட்டுமொத்தமாகப் பிடிக்க தனிப்படையை அமைத்துள்ளது மதுரைகாவல்துறை.
பல்வேறு ஊழல்களின் ஆரம்ப இடமாக கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள் இருந்து வருகின்றன. ஒரு ரூமைவாடகைக்கு எடுத்துக் கொண்டு இந்த அதிகாரிகள் அலுவலகம் நடத்தி வருகின்றனர்.
ரேசன் கார்ட், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது இவர் தான் நம்மைப் பற்றியஅடையாளங்களையும் நாம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தான் என்பதற்கும் தாசில்தார் அலுவலகத்துக்கு சான்றுதர வேண்டும்.
ஆனால், இந்த அதிகாரிகளை நாம் அணுகினால் முதலில் காசு வைத்தால் தான் வேலையே நடக்கும். நேரடியாகபணம் பறிப்பது ஒரு புறம்.
அப்புறம் பெற்றோர் தினம், சாரணர் தினம் ஆகிய தினங்களைக் குறிப்பிடும் கொடிகளை (ஸ்டாம்ப் சைசில்இருக்கும் முத்திரைகள்) வைத்துக் கொண்டு அதை நாம் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என தலையில்கட்டுவார்கள்.
இவர்களுக்கு இந்த ஸ்டாம்புகள் இலசமாகத் தரப்படுகின்றன. ஆனால், அதை நம்மிடம் பல மடங்கு விலைக்குவிற்பார்கள். இங்கு தான் பல ஊழல்கள் தொடங்குகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications