ஊமையாகிவிட்டது தமிழக அரசு: இளங்கோவன் பாய்ச்சல்
கன்னியாகுமரி:
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவைப் பயிருக்குத் தேவையான நீரைப் பெற்றுத் தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல்உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தேவையானதண்ணீர் எப்போது திறந்து விடப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆனால் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு வெகு குறைவாக உள்ளதால் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது.இதுதொடர்பாக அரசுத் தரப்பு மெளனம் காப்பதும், கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காமல் ஊமையாகிக்கிடப்பதும் வருத்தம் தருகிறது.
டெல்லிக்கு பிரதமரைச் சந்திக்க முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது கூடவே, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கூட்டிச் செல்லவேண்டும். பிரதமரிடம் காவிரி நீர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்.
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டம் எதுவும் நடைபெறவில்லை. மாறாக எதிர்க்கட்சி தலைவர்களைப் பழி வாங்குவதிலும், கட்சிகளைஉடைப்பதிலுமே ஆளுங்கட்சியினர் முழுக் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications