ஊர் பஞ்சாயத்தில் தாலியை கழற்றி கணவர் முகத்தில் வீசிய பெண்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

பஞ்சாயத்தில் வைத்து, நான் வேண்டாம் என்றால் நான் கட்டிய தாலி எதற்கு என்று கேட்ட கணவரின் முகத்தில்தாலியை கழற்றி எறிந்தார் ஒரு பெண். இதனால் பஞ்சாயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சினிமாவில் மட்டுமே நாம் பார்த்து வரும் இந்தச் சம்பவம் நிஜத்திலும் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுவைச் சேர்ந்தவர் சாமு. தனியார் பஸ் கிளீனரான இவருக்கும் குமாரி என்றபெண்ணுக்கும் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆனால், திருமணமான சில நாட்களிலேயே குமாரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சாமுபலமுறை அழைத்தும் கூட குமாரி வரவில்லை. இதையடுத்து இது தொடர்பாக பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார்.

இந்த விவகாரம் சமீபத்தில் பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் விவாகரத்து அளித்துபஞ்சாயத்து தீர்ப்பு அளித்தது. குமாரிக்கு ஜீவனாம்சமாக ரூ. 7,000 தரவும் சாமுவுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ரூ. 7,000த்தை குமாரியிடம் தந்த சாமு, நானே வேண்டாம்னு சொல்லிட்டே, அப்புறம் ஏன் நான்கட்டிய தாலியை கட்டியிருக்கே என்று கேட்டார்.

அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் தாலியைக் கழற்றி சாமுவின் முகத்தில் வீசினார் குமாரி.

சாமு உள்பட பஞ்சாயத்தும் திகைத்துப் போய் நின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+