தலித்களை மலம் சாப்பிட வைத்த சம்பவம்: சப்--இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
திருச்சி:
திருச்சி அருகே லால்குடியில் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை இழிவுபடுத்திய சம்பவத்தை நேரில் சென்று விசாரிக்காத சப் இன்ஸ்பெக்டர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
லால்குடி அருகே உள்ளது திண்ணியம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவி ராஜலட்சுமி. தாழ்த்தப்பட்டதொழிலாளர்கள் 3 பேரை தனது தோட்டத்தில் வேலை பார்க்க இவள் அழைத்தாள்.
ஆனால், இன்னொரு இடத்தில் வேலைக்குச் சென்றதால் அவர்களை கூப்பிட்டு ஜாதியைச் சொல்லி திட்டினார். பின்னர் இவளது கணவர்சுப்பிரமணியன் என்பவனும், மேலும் இவளது ஜாதியைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து அந்த அப்பாவி தலித்களை மலம் சாப்பிட வைத்துகொடுமைப்படுத்தினர்.
முதலில் இந்த தலித்களை அடித்து ரத்தக் காயப்படுத்திய இந்தக் கும்பல் ஒரு முறத்தில் மலத்தை கொண்டு வந்து வைத்தது. அதை ஒருவருக்குஒருவர் ஊட்டி விட வேண்டும் என்று அந்த தலித்களை இந்தக் கும்பல் கூறியது.
இதைச் செய்ய மறுத்து அந்த தலித்களை சூடு போட்டு இக் கும்பல் கொடுமைப்படுத்தியது.
இதையடுத்து உயிருக்குப் பயந்து அந்த 3 தலித்களும் ஒருவருக்கு ஒருவர் மலத்தை ஊட்டி விட்டு உண்டனர்.
இதையடுத்து அந்த 3 அப்பாவிகளும் அழுதபடி தங்கள் மக்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தலித்கள் காவல் நிலையத்தில் சென்றுபுகார் கொடுத்தனர். ஆனால், பஞ்சாயத்துத் தலைவியின் ஜாதியைச் சேர்ந்த அந்த ஸ்டேசனின் சப்-இஸ்பெக்டர் இது குறித்து புகார் வாங்கமறுத்துவிட்டார்.
இதனால் தங்களுக்குள்ளேயே புழுங்கிவிட்டு அந்த மக்கள் இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லாமல் இருந்துவிட்டனர்.
இந் நிலையில் தான் இந்தச் சம்பவம் குறித்து பத்திரிகைகளில் செய்து வெளியானது.
இதையடுத்து வேண்டா வெறுப்பாக ராஜலட்சுமியையும் அவளது கணவன் சுப்பிரமணியத்தையும் போலீசார் கைது செய்தனர்.
மலம் சாப்பிட வைத்து அவமானப்படுத்திய இந்தச் செய்தி தமிழகத்தையே பதற வைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்காத லால்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரிக்க அந்த கிராமத்துக்குக் கூட இந்த காக்கிசட்டை ஆசாமி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications