ஜெ. மீது புகார் தந்த அதிகாரி டப்பா பதவிக்கு மாற்றம்
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.சங்கருக்கு நீண்ட நாள் விடுப்பு கொடுத்ததோடு பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் வேண்டிய,வேண்டாத இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் நன்மை சில அதிகாரிகள் சசிகலாவின் ஆசி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கற்பூரசுந்தரபாண்டியன். சசிகலா குடும்பத்தின் பரிபூரண ஆசி பெற்ற இந்த சர்ச்சைக்குரிய அதிகாரி போக்குவரத்துத்துறைசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத் தலைவரான ஆதிமூலம் பழிவாங்கப்பட்டுள்ளார். இவருக்கு உப்புச் சப்பில்லாத தொல்பொருள் மற்றும்வரலாற்று ஆராய்ச்சித்துறையின் சிறப்பு கமிஷனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சாட்டையால் அடித்து ஐ.ஏ.எஸ. அதிகாரிகளை வேலைவாங்குகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா பேசியதைக் கண்டித்து தலைமைச் செயலாளர் சங்கரிடம் புகார் மனு கொடுத்து பரபரப்புஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகராட்சியில் திமுக மேயருக்கு தலைவலி தந்து வந்த ஹர்சகாய்மீனா வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இருந்த மதுரை மாநகராட்சி பதவியில் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக கலைவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் தற்போதைய கமிஷனர்ராமநாதன் ஜவுளி மற்றும் தொழில்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறையின் செயலாளராக நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ஆச்சார்யலு, தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரியத் தலைவர் மற்றும் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்தான் கருணாநிதி மீது வழக்குப் போட்டவர் மற்றும் சென்னை மேயர் ஸ்டாலினுடன் அடிக்கடி மோதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிலருக்கு பதவி உயர்வுடன் மாற்றம் தரப்பட்டுள்ளது.
மொத்ததில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளி கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications