இலங்கை அமைதிப் பேச்சுக்கு இந்தியா முழு ஆதரவு
டெல்லி:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே விரைவில் நடக்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குஇந்தியா முழுமையான ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.
அமைதிப் பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் குறித்தும் அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும்இந்தியாவிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரணில் நேற்று நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் வர்த்தகஅமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள்குறித்து பேச்சு நடத்தினார்.
அதன்படி இலங்கைக்கு இந்தியா ரூ.500 கோடி மதிப்புள்ள பொருள்களை இந்தியா கடனாக அளிக்கும் என்றும்இது தவிர 3 லட்சம் டன் கோதுமையும் அந்நாட்டுக்கு அளிக்கப்படும் என்றும் இந்தச் சந்திப்புக்குப் பின்னர்நிருபர்களிடம் சின்ஹா கூறினார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியுமான சோனியாகாந்தியையும் ரணில் சந்தித்துப் பேசினார். இலங்கையில் விரைவில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தைகுறித்து தான் அவருடன் பேசியதாகப் பின்னர் ரணில் தெரிவித்தார்.
ஆனால், ராஜிவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்த நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ரணில் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை உள்துறை அமைச்சர் அத்வானியையும் ஜஸ்வந்த் சிங்கையும் தனித்தனியே சந்தித்துப்பேசினார் ரணில்.
சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குஇந்தியாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக விரைவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயம்வெற்றி பெறும் என்றும் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கவிருக்கும் ரணில், இன்று மாலையேசென்னையில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
புலிகள் இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் பிரபாகரனைப் பிடிக்க இந்திய ராணுவத்தைஇலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
கடந்த 1992ம் ஆண்டு முதல் புலிகள் மீது இந்தியா தடை விதித்துள்ளது என்பதும் கடந்த மே 12ம் தேதி தான்இந்தத் தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications