கிளைடர் விபத்தில் இறந்த என்.சி.சி. மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி
சென்னை:
சென்னை தாம்பரத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்ததில் இறந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு என்.சி.சி சார்பில் ரூ. 2 லட்சம்நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் கிளைடர் விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னைகுருநானக் கல்லூரி என்.சி.சி. மாணவி சத்யா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தார். அவருடன் பயிற்சியாளர் கேப்டன் பவேஜாவும்இறந்தார்.
மாணவி சத்யாவின் இறுதிச் சடங்குகள் தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் என்ற இடத்தில் திங்கள்கிழமை நடந்தது.
இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி பிராந்திய என்.சி.சி. கமாண்டர் ஹாரிஸ் கெளல் கலந்து கொண்டார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி சத்யாவும், சிறந்த பயிற்சியாளரான பவேஜாவும் இறந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவி சத்யாவின் குடும்பத்துக்கு என்.சி.சி. நல நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையே இவ்விபத்தில் பலியான கேப்டன் பவேஜாவின் உடலும் இன்று காலை முழு ராணுவ மரியாதையுடன் சென்னைபெசன்ட் நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ உயர் அதிகாரிகள் பவேஜாவின் உடலுக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications