ஸ்டாலின் பதவி விலக மாட்டார்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
ஸ்டாலின் எந்தப் பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டார் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.அரசு விரும்பினால் எந்தப் பதவியை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
ஸ்டாலினைக் குறி வைத்து ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதற்குஆளுநர் ராம்மோகன் ராவின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதையடுத்து இந்தச் சட்டம் அரசு கெசட்டில் (அரசுஆணை) வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்குஸ்டாலின் உள்ளானார். அவர் இம் மாதம் 18ம் தேதிக்குள் இதற்கான முடிவெடுக்க வேண்டும். இதற்கு இன்னும் 5நாட்கள் தான் உள்ளன.
இந் நிலையில் பதவிப் பறிப்பு குறித்து மு.க. ஸ்டாலினுக்கு நேற்று தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.உள்ளாட்சித்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
மேயர் என்ற முறையில் மாநகராட்சிக்கும், எம்.எல்.ஏ. என்ற முறையில் கட்சியின் அலுவலகத்துக்கும் இந்தநோட்டீஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே போல மாநகராட்சி கமிஷ்னருக்கும் இதன் நகல்அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று மாலை அனுப்பப்பட்ட இந்த நோட்டீசில் மேயராக தொடரப் போகிறீர்களா? எம்.எல்.ஏவாக இருக்கப்போகிறீர்களா என்பதை 5 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இல்லாவிட்டால்அரசே பதவியைப் பறிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்குஸ்டாலின் உள்ளானார். அவர் இம் மாதம் 18ம் தேதிக்குள் இதற்கான முடிவெடுக்க வேண்டும். இதற்கு இன்னும் 5நாட்கள் தான் உள்ளன.
கருணாநிதி பேட்டி:
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா கொண்டு வந்த இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர மாட்டோம். ஸ்டாலின் எந்தப் பதவியையும்விட்டு தானாக விலக மாட்டார். அரசு எந்தப் பதவியை வேண்டுமானாலும் இஷ்டப்படி பறித்துக் கொள்ளலாம்.அதைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றார்.
கட்சிகளை உடைக்க சதி:
பாட்டாளி மக்கள் போன்ற கட்சிகளை உடைக்கும் வேலையில் அதிமுக இறங்கியுள்ளது. அவர்களுக்கு முழுமெஜாரிட்டி இருந்தும் கூட ஏன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை.
அப்துல் கலாமை போட்டியில்லாமல் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications