தனி மனிதனை விட நாடு தான் பெரியது: கலாம் அறிக்கை
சென்னை:
தனி மனிதர்களை விட நாட்டின் நலன் மிக முக்கியமானது என்று ஜனாதிபதியாகவுள்ள விஞ்ஞானி அப்துல் கலாம்கூறியுள்ளார்.
தன்னை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தியுள்ளதையடுத்து நாட்டு மக்களுக்கு அவர் ஒரு விடுத்துள்ள செய்தியில்,
தேசத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கையின் அடையாளம் தான் ஜனாதிபதி பதவி. அந்தப் பதவிக்கு என் மீதுநம்பிக்கை வைத்து என்னை நிறுத்தியுள்ள நாட்டின் அரசியல் கட்சிகளுக்கும், தேசத்துக்கும் நான் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த திங்கள்கிழமையில் இருந்து தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் என வாழ்த்து மழையில் மூழ்கிக்கிடக்கிறேன். இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உண்மையில் என்ன சொல்வது என்றே எனக்குத்தெரியவில்லை.
இன்டர்நெட்டிலும் பத்திரிக்கைகள் சார்பிலும் தேசத்துக்கு உங்கள் செய்தி என்ன என்று கேட்டுக் கொண்டேஇருக்கிறார்கள். நான் என்ன செய்தியை மக்களுக்குச் சொல்வது என்று புரியவில்லை.
எனக்கு கீதையில் கிருஷ்ணர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அதுவும் நல்லதே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.
பள்ளிக் குழந்தைகளுடன் எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை இங்கே சுட்டிக் காட்டுவது நல்லது என்றுநினைக்கிறேன். போர்பந்தரில் 3,000 பள்ளிக் குழந்தைகள் மத்தியில் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது10ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி தைரியமாய் எழுந்தாள்.
என்னிடம் சார், எங்களைப் போன்றவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டாள்அந்த மாணவி.
நான் சொன்னேன், என் அருமை குழந்தைகளே.. எந்த ஒரு தனி மனிதனையும் விட தேசம் தான் பெரியது, தேசம்தான் மிக முக்கியமானது என்ற நினைப்பை வேத மந்திரமாக மனதில் நிறுத்திக் கொண்டு வளருங்கள். இது தான்எனது செய்தி என்று கூறினேன்.
இன்றும் அது தான் என் மக்களுக்கு நான் சொல்லும் செய்தி என்று கூறியுள்ளார் அப்துல் கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications