கலாமை எதிர்த்து வீராங்கனை லட்சுமி செகல் போட்டி
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கேப்டன் லட்சுமி சேகல்நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தேசிய ராணுவத்தில் பணியாற்றிய வீராங்கனையாவார். 88 வயதான லட்சுமி1938ம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்தார்.
மிகுந்த தேசப் பற்று காரணமாக நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்து ராணி ஜான்சி படைப் பிரிவை தலைமை தாங்கிநடத்தினார். தேசிய ராணுவ மருத்துவப் பிரிவிலும் பணியாற்றினார்.
இவருக்கு முன்னாள் பிரதமர்களான வி.பி.சிங், தேவெ கெளடாவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போட்டியிட நான் தயார் என்றும் லட்சுமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தங்கள் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,பார்வர்ட் பிளாக் கட்சிகள் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தின.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஏ.என். அகமதி அல்லது முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிஆகியோரில் ஒருவரை நிறுத்த இந்தக் கட்சிகள் திட்டமிட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின்ஆதரவைப் பெறவும் திட்டமிட்டிருந்தன.
ஆனால், காங்கிரஸ் கட்சியும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் அப்துல் கலாமுக்கு ஆதரவுதெரிவித்துவிட்டன. இதையடுத்து முலாயம் சிங் யாதவை தங்கள் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள்நீக்கன.
இதையடுத்து இப்போது தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே கலாமுக்கு எதிராக நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்முடிவு செய்தன. சில இடதுசாரித் தலைவர்கள் பாத்திமா பீவியை நிறுத்தலாம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் டெல்லியில் இன்றுகாலை தொடங்கியது.
இக் கூட்டத்தில் லட்சுமியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அப்துல் கலாமின் வெற்றி நிச்சயமாகிவிட்டபோதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தங்களது எதிர்பைக்காட்டும் வகையில் வேட்பாளரை நிறுத்த அக் கட்சிகள் நிறுத்தியுள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications