அமைதி பேச்சுக்கான தேதி: நார்வே குழு இலங்கை வருகை
கொழும்பு:
தாய்லாந்தில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிப்பது குறித்து விவாதிக்க நார்வே தூதுக் குழுஅடுத்த வாரம் கொழும்பு வருகிறது.
நார்வே வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எரிக் சோல்ஹைம் தலைமையில் இந்தக் குழு கொழும்பு வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்ததின்போது இலங்கை அரசு கொடுத்த சில உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததால் இந்தப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள புலிகள் தரப்பில் ஆர்வம் காட்டப்படவில்லை.
தங்கள் மீதான தடையை முதலில் நீக்க வேண்டும் என்று புலிகள் கூறியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பாகஇருந்து கொண்டு பேச்சு நடத்த இஷ்டமில்லை என புலிகள் தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து தடையை நீக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. இது தொடர்பாக இந்தியாவிடமும் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கே விளக்கிவிட்டார். இலங்கை அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் ஆதரிப்பதாகஇந்தியா தெரிவித்துவிட்டது.
தடையை நீக்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் தொடங்கிவிட்டன. இதனால், பேச்சுவார்த்தைக்கான தேதியைஇறுதி செய்ய உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக நார்வே கருதுகிறது.
இலங்கை அரசுடன் பேசிவிட்டு இந்தக் குழு புலிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications