வாஜ்பாய் மீண்டும் காஷ்மீர் பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய் மீண்டும் காஷ்மீர் செல்கிறார். அங்கு பாதுகாப்பு நிலைமை அவர் நேரில் பார்வையிடுகிறார்.

வரும் 20ம் தேதி அவர் ஸ்ரீநகர் செல்கிறார். 2 நாட்கள் அவர் அங்கு தங்கியிருப்பார். மாநில முதல்வர் பரூக்அப்துல்லா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவார்.

ஆனால், ஹூரியத் அமைப்பின் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்த மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் எல்லையில் பதற்றம் உச்ச நிலையில் இருந்தபோது பிரதமர் காஷ்மீர் சென்றார்.அங்கு இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்கள் இடையே ஆவேச உரையாற்றினார்.

இதன் பின்னர் தான் அமைதி முயற்சிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. தீவிரவாதிகளை உடனடியாகஒடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை வாஜ்பாயின் பயணம் அரசியல் சார்ந்தாக இருக்கும் என்று தெரிகிறது. அம் மாநிலத்தில் வரும்அகடோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க.- பரூக் அப்துல்லா கூட்டணிஅமைத்துப் போட்டியிடுவது சாத்தியமில்லை என்று தெரிகிறது.

இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளது. ஆனால், இருகட்சிகளுக்கும் இடையே நல்லுறவு இல்லை.

வரும் சட்டமன்றத் தேர்தலில் காஷ்மீரில் பா.ஜ.கவின் அரசியல் திட்டம் குறித்து பிரதமர் வாஜ்பாய் அம் மாநிலபா.ஜ.கவினருடன் விவாதிப்பார்.

சமீபத்தில் தான் காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதியை பிரதமர் ஒதுக்கினார்.

பாக். கடற்படை வாபஸ்:

இதற்கிடையே எல்லையில் பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியின் ஒருபடியாக தனது கப்பல் படையை இந்திய கடல்எல்லையில் இருந்து பாகிஸ்தான் வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது. ஆனால், பதற்றத்தைக் குறைக்க பாகிஸ்தான் முழுமனதுடன் செயல்படவில்லை என இந்தியா கூறியுள்ளது.

அதிகரிக்கவில்லை.. குறையவும் இல்லை:

இந் நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்கவில்லை, அதே நேரத்தில் குறையவும் இல்லைஎன இந்தியா கூறியுள்ளது.

இது குறித்து உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமி கூறுகையில்,

வழக்கமாக செப்டம்பர் மாதம் மலைப் பகுதிகளில் பனி படர்ந்துவிடும். இதனால் ஊடுருவது மிகவும்சிரமமாகிவிடும். இதனால் மே முதல் ஆகஸ்ட் வரை தீவிரவாதிகள் ஊடுருவல் பல மடங்கு அதிகரிக்கும். ஆனால்,இம்முறை அது போல நடக்கவில்லை. ஊடுருவல் அதிகரிக்கவில்லை.

ஆனால், அதே நேரத்தில் வழக்கமாக ஊடுருவல் குறையவும் இல்லை. ஆங்காங்கே தொடர்ந்து தீவிரவாதிகள்இந்தியாவுக்குள் வந்து கொண்டு தான் உள்ளனர். இவர்களை முழுமையாக பாகிஸ்தான் தடுக்காத வரைபேச்சுவார்த்தைக்கு இந்தியா முன் வராது என்றார்.

ராணுவ அதிகாரிகள் பேட்டி:

இந் நிலையில் பத்திரிக்கையாளர்களை இந்திய ராணுவம் நேற்று எல்லைப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. அங்குநிருபர்களிடம் பேசிய அதிகாரிகள், பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல் பெருமளவு குறைந்துவிட்டதாக செய்திகள்வருவது தவறு. வழக்கமான தாக்குதலை அவர்கள் நடத்திக் கொண்டு தான் உள்ளனர்.

பகலில் அமைதியாக இருந்தாலும் இரவில் பாகிஸ்தானின் தாக்குதல் தொடங்கிவிடுகிறது. இந்தியப் படைகளைதிசை திருப்பிவிட்டு தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காகத் தான் இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான்ராணுவம் நடத்தி வருகிறது என்றனர்.

புஷ்- பிளேர் பேச்சு:

இந் நிலையில் இந்திய- பாகிஸ்தான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் பிரிட்டன் அதிபர் டோனிபிளேரும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். ஹூஸ்டன் நகருக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது புஷ் இந்த ஆலோசனையை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+