ஆகஸ்ட் 1-ல் காங்கிரஸ்- த.மா.கா. இணைகின்றன
டெல்லி:
காங்கிரஸ்- த.மா.கா. இரு கட்சிகளும் ஆகஸ்ட் 1ம் தேதி இணையவுள்ளன. இந்த இணைப்பு விழா சென்னையில்நடக்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காரணமாக காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பு தாமதமாகியுள்ளது.
காங்கிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு குறித்து இறுதிச் சுற்றுப் பேச்சு நேற்று நடப்பதாக இருந்தது. அதுஒத்திவைக்கப்பட்டு இன்று நடந்தது.
இணைப்பு தேதி குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை த.மா.கா. தலைவர் வாசன்உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது இந்த இணைப்புத் தேதி முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக அடுத்த மாதம் 15ம் தேதி காமராஜர் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த தினத்தில் இரு கட்சிகளும்இணையலாம் என்று முதலில் இரு தரப்பினரும் திட்டமிட்டிருந்தனர். அந்த தினத்தில் மதுரை அல்லது காமராஜர்பிறந்த விருதுநகரில் சோனியா தலைமையில் விழா நடத்தி இரு கட்சிகளையும் இணைக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அடுத்த மாதம் 15ம் தேதி தான் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அனைத்து எம்.பிக்களும்எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க வேண்டும். இதனால், அந்த தினத்தில் இணைப்பு விழாவை நடத்த இயலாதசூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு இணைப்பு விழா நடக்கிறது. இணைப்பு விழாவை சென்னையில் நடத்துவதுஎன்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications