கலாமை சந்தித்தார் ஜெயலலிதா
சென்னை:
திடீரென்று தன்னை சந்திக்க வந்த முதல்வர் ஜெயலலிதாவை தனது பாணியில் வரவேற்று, கையில் ஒரு புத்தகத்தையும் கொடுத்துஆச்சரியப்படுத்தினார் பாரத ரத்னா அப்துல் கலாம்.
முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள அப்துல் கலாமை ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணாபல்கலைக்கழக விருந்தினர் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
திடீரென்று அவர் வந்தாலும் கூட அப்துல் கலாமிடம் எந்தவித பரபரப்பும் தெரியவில்லை. தனது டிரேட் மார்க் புன்னகையுடன்ஜெயலலிதாவை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் வழக்கம் போல மிகவும் ஜாலியாக ஜெயலலிதாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
கலாமுக்கு ஜெயலலிதா போகே வழங்கி பொன்னாடை போர்த்தினார். அப்போது, நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன் என்றுகூறியவாறே, தனது இந்தியா விஷன் - 2020 என்ற புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை வழங்கினார்.
அதை புன்னகையுடன் வாங்கிக் கொண்ட ஜெயலலிதா, உங்கள் கனவு விரைவில் நனவாக வேண்டும் என்றார்.
ஜெயலலிதாவும், கலாம் உரையாடுவதை போட்டோகிராபர்கள் படம் எடுத்துத் தள்ளினர். அப்போது பாதுகாவலர்கள் அவர்களைக்கட்டுப்படுத்த முயன்றபோது, அவர்களைத் தடுத்தார் கலாம்.
அவர்கள் விரும்பியவாறு எடுத்துக் கொள்ளட்டுமே என்று புன்னகையுடன் கூறியவாரே அவர்களை விலக்கினார்.
முன்னதாக ஆளுநர் ராம் மோகன் ராவ் மற்றும் சென்னை மேயர் ஸ்டாலினும் ஞாயிற்றுக்கிழமை கலாமை நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவித்தனர்.
போட்டோகிராபர்களுடன் குரூப் போட்டோ:
ஜெயலலிதா சென்ற பின்னர் பத்திரிக்கை போட்டோகிராபர்களிடம் வந்த கலாம், அவர்களிடம் கேமரா, லென்ஸ் குறித்து விளக்கம் கேட்டார். ஒரு செட்பேட்டரி எத்தனை போட்டோ எடுக்க உதவும் என்று கேட்டவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டோகிராபரிடமும் பெயர்களைக் கேட்டார். எந்தப்பத்திரிக்கையில் இருந்து வேலை பார்க்கிறீர்கள் என்ற விவரங்களைக் கேட்டறிந்தார்.
சார் உங்க கூட ஒரு குரூப் போட்டோ எடுக்கனும் என்று போட்டோகிராபர்கள் கோரிக்கை வைத்தனர். அட, எடுக்கலாமே என்று கூறிக் கொண்டேபோட்டோகிராபர்கள் மத்தியில் வந்து நின்று கொண்டார் கலாம்.
அவரது மிக இயல்பான பேச்சு, செயல்களால் நெகிழ்ந்து போயினர் போட்டோகிராபர்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications